கால் வலி ஏற்பட்டால், முதற்கட்டமாக ஓய்வு எடுக்க வேண்டும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

காலின் கீழே ஐஸ் பேக் வைக்கலாம், ஆனால் நேரடியாக வைக்கக்கூடாது. துணியில் சுற்றி வைக்க வேண்டும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

இப்யூபுரூஃபன் அல்லது அசிடமினோஃபென் போன்ற மருந்துகள் பாத வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

கால்களின் அடிப்பகுதியில் வலி ஏற்படுவதற்கு காலணிகள் காரணமாக இருக்கலாம் எனவே கால்களுக்கு இதமான காலணிகளை அணிய வேண்டும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

கால்களின் ஆதரவுக்காக குஷனைப் பயன்படுத்தலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

இப்சம் உப்பு சேர்த்து, லேசான சூட்டில் உள்ள நீரில் பாதத்தை ஊற வைத்தால் தசை வலி மற்றும் வீக்கம் குறையும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

காலின் எந்தெந்த இடங்களில் வலி இருக்கிறதோ, அந்த இடங்களில் மசாஜ் செய்ய வேண்டும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்

வீக்கம் குறைக்க ஓய்வு நேரத்தில் காலை உயர்த்தி மேல்நோக்கியபடி வைக்கலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

வீட்டிலேயே தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் இந்த வலிப் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்டவை ஆலோசனைக்காக மட்டுமே. தேவையான சிகிச்சை முறை/உணவு முறையைப் பின்பற்றுவதற்கு, கண்டிப்பாக நிபுணர்/மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்