Mobile Tricks to Follow: மொபைல் தொலைஞ்சிருச்சா? ட்ராக் செய்ய சிம்பிள் டிப்ஸ், செய்ய வேண்டிய 3 செட்டிங்ஸ்..!
Mobile Tricks to Follow: தொலைந்துபோன செல்போனை கண்டுபிடிக்க உதவும் மூன்று ஆலோசனைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Mobile Tricks to Follow: செல்போனில் மேற்கொள்ளக்கூடிய 3 செட்டிங்ஸ்கள், தொலைந்த வேலையில் அதை எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.
தொலைந்த மொபைலை கண்டுபிடிக்க வழிகள்:
காலையில் எழுந்தது முதல் மாலையில் படுக்கைக்குச் செல்லும் வரை கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்தும் ஒரே விஷயம் செல்போன் மட்டுமே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோக்கங்களுக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு அது தேவையில்லை என்றாலும் கூட. ஆனால், சிறிது நேரம் அந்த மொபைல் காணாமல் போன கூட உரிமையாளர்கள் பதறுகின்றனர். காரணம் தற்போது மொபைல் என்பது வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு சாதரண மின்னணு சாதனம் மட்டுமல்ல. வங்கிக் கணக்குகள் தொடங்கி, யாருமே அறிந்திடாத பல தனிப்பட்ட ரகசியங்களை கூட அந்த மொபைல்கள் தான் தேக்கி வைத்துள்ளன. எனவே, மொபைல் காணாமல் போனால், அதில் உள்ள தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது என மக்கள் அஞ்சுகின்றனர். அந்த ஆபத்தை தடுக்க, உங்கள் தொலைபேசியில் செட்டிங்ஸில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து இங்கே அறியலாம்.
மொபைலை ட்ராக் செய்ய ஆலோசனைகள்;
1. சுவிட்ச் ஆஃப் செய்வதை தடுக்க..
யாராவது உங்கள் போனை யாரேனும் திருடினால், முதலில் அதை சுவிட்ச் ஆஃப் செய்ய முயற்சிப்பார்கள். அப்படி நடக்காமல் தடுக்க, பாஅஸ்வேர்ட் இருந்தால் மட்டுமே சுவிட்ச் ஆஃப் செய்யக்கூடிய வகையில் செட்டிங்ஸ் அமைக்கலாம். இதற்கு, உங்கள் மொபைலில் உள்ள செட்டிங்ஸிற்கு செல்ல வேண்டும். அதில், More Security and Privacy என்பதைக் கிளிக் செய்து, பின்னர் Required Password to Power Off என்பதைக் கிளிக் செய்யவும். அங்கு, பவர் ஆஃப் பட்டனை இயக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்தால், உங்கள் தொலைபேசி அணைக்கப்படுவதற்கு முன்பு நிச்சயமாக பாஸ்வேர்டைகேட்கும்.
2. விமானப் பயன்முறையை தடுப்பது..
திருடிய நபர் உங்கள் மொபைல் போனை விமானப் பயன்முறையில் வைப்பதைத் தடுக்க விரும்பினால், நீங்கள் கட்டுப்பாட்டு மையத்தைப் பூட்ட வேண்டும். அதற்கு செட்டிங்ஸிற்கு செல்லவும். அதில், அறிவிப்பு நிலை பட்டனை கிளிக் செய்யவும். அங்கு, நிலைப் பட்டியில் சென்று பூட்டுத் திரை அறிவிப்பைக் கிளிக் செய்யவும். லாக் ஸ்கிரீனில் ஸ்வைப் டவுன் ஆன் டு வியூ நோட்டிஃபிகேஷன் பார் பட்டனை ஆஃப் செய்ய வேண்டும்.
3. போனை எப்படி கண்டுபிடிப்பது..
உங்கள் தொலைபேசி தொலைந்து போயிருந்தாலும் அல்லது திருடப்பட்டாலும் அதை மீண்டும் கண்டுபிடிக்க விரும்பினால், இந்த செட்டிங்ஸை உங்கள் மொபைலில் வைத்திருக்க வேண்டும். அதற்கு, உங்கள் மொபைலில் Find My Device-ஐ இயக்க வேண்டும். உங்கள் மொபைலில் Find My Device-ஐ இயக்கி, Find Your Offline Device-ஐக் கிளிக் செய்யவும். அதில், Without Network என்பதைக் கிளிக் செய்து, அம்சத்தை இயக்கவும். இதன் பொருள் சிம் அகற்றப்பட்டாலும், தொலைபேசியின் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும்.
இந்த மூன்று செட்டிங்ஸ்களையும் உடனடியாக உங்கள் மொபைலில் அமைப்பதன் மூலம், உங்கள் போன் தொலைந்து போனாலும் அல்லது திருடப்பட்டாலும் கவலைப்படாமல் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.





















