கோடை வெயிலை சமாளிக்க இதை டயட்டில் சேருங்க!
இதில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மக்னீஸியம், கார்டனாய்ட்ஸ், அத்துடன் இதில் ஆன்ட்டி இன்ஃபளமேட்டரி குணநலன்கள் அதிகமாக உள்ளது
முலாம் பழத்தில் கோடை காலத்திற்கு தேவையான நீர்ச்சத்தும், சுவையும், அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
முலாம்பழத்தில் உள்ள அடினோசைன் மற்றும் பொட்டாசியம் இதயத்தை பாதுகாக்கும்.
முலாம்பழத்தில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது. இது முடி உதிர்தலைத் தடுத்து முடி வளர உதவுகிறது. இதை சாப்பிடுவதோடு பழக்கூழாக்கி தலையில் நேரடியாக தேய்த்துக் குளிக்கலாம்.
முலாம்பழம் உடல் எடை குறைப்புக்கு உதவும். இதை உண்ணுவதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவாக இருக்கும்.
முலாம்பழத்தில் பீட்டா கரோடீன் இருப்பதால் அது கண்களைப் பாதுகாக்கும். பீட்டா கரோடீனில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளைத் தீர்க்கும்.
முலாம்பழம் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும்.
பொட்டாசியம் உடலுக்கு சோடியத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.
ஸ்மூத்தி, ப்யூரி, ஐஸ் க்ரீமி, யோகர்ட், ஃப்ரோஸன் டெஸர்ட்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம்.