மேலும் அறிய

Iphone 15 Series: ஐபோன் 15 சீரிஸ் செல்போன்கள், 2 புதிய வாட்ச்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்..

Apple Iphone 15 Series: ஆப்பிள் நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபோன் 15 சீரிஸ் மாடல் செல்போன்களையும், அதோடு 2 ஸ்மார்ட் வாட்ச் மாடல்களையும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Apple Iphone 15 Series: ஆப்பிள் நிறுவனம் இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணியள்அவில் தனது புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல் செல்போன்களையும், அதோடு 2 ஸ்மார்ட் வாட்ச் மாடல்களையும் அறிமுகப்படுத்தியது.

ஐபோன்  சீரிஸ்:

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக இருப்பது ஐபோன். ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்ட மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஐபோன்கள் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் வெளியான ஐபோன்-X வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து வெளியான ஐபோன் சீரிஸ்11, 12 ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேநேரம், ஐபோன் சீரிஸ் 13 மற்றும் 14 மாடல்கள் முந்தைய இரண்டு மாடல்களை விட கூடுதலான கவனத்தை பெற்றது. இந்நிலையில் தான், ஐபோன் 15 சீரிஸ் மாடல் செல்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம்:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் செல்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்ச்சி, இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கியது. அதில், 15 சீரிஸில் 4 புதிய செல்போன்களையும், அதோடு 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு,  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 என புதியதாக் இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களும் வெளியாகியுள்ளன.

அம்சங்கள் என்ன?

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் செல்போன்கள் இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில்,  128GB, 256GB மற்றும் 512GB ஆகிய கட்டமைப்புகளில் கிடைக்கும். 26mm குவிய நீளம், 2-மைக்ரான் குவாட் பிக்சல் சென்சார் மற்றும் 100 சதவீத ஃபோகஸ் பிக்சல்கள் கொண்ட 48MP பிரதான கேமராவுடன் ஐபோன் 15 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் 15 இல் இரவு பயன்முறையும் சிறப்பாக உள்ளது. ஐபோன் 14 ப்ரோவில் உள்ள பயோனிக் ஏ16 சிப் ஐபோன் 15 இல் பொருத்தப்பட்டுள்ளது. இது ஏ15 பயோனிக் சிப்செட்டை விட குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறது.

சார்ஜிங் அம்சம் & விலை:

ஐபோன் 15 ஆனது அமெரிக்காவில் $799 தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 அடிப்படை மாடலைப் போலவே உள்ளது.  அடிப்படை iPhone 15 Plus மாடலின் விலை $899 ஆகும். USB Type-C சார்ஜிங் போர்ட்டுடன் வந்த முதல் iPhone மாடல் iPhone 15 ஆகும்.  இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செப்டம்பர் 15ம் தேதி முதல் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை முன்பதிவு செய்யலாம் எனவும், செப்டம்பர் 22ம் தேதி முதல் செல்பொன்களின் விற்பனை மற்றும் விநியோகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 சீரிஸ் மாடல் இந்திய சந்தையில் முறையே ரூ.79,900 மற்றும் ரூ.89,900-க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ப்ரோ வேரியண்ட் செல்போன்கள் அமெரிக்காவை காட்டிலும் இந்தியாவில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஐபோன் 15 ப்ரோ மாடல் விலை ரூ.1,34,900 எனவும், ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,59,900 எனவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  முந்தைய மாடலை விட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தாலும், விலை ஆனது குறைந்த அளவிலான ஏற்றம் மட்டுமே கண்டுள்ளது.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Doctor fight | Govi Chezhian | ஓரங்கட்டப்பட்ட கோவி செழியன்? Udhayanidhi கொடுத்த வார்னிங்! தஞ்சை திமுக பரபரப்புSalem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "நான் திருப்தி அடையல" விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்?
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Home Loan Default: வீட்டுக் கடன் டீஃபால்ட் ஆகிவிட்டதா? கடனை அடைப்பது எப்படி? சொத்தை மீட்பதற்கான வழிகள்
Delhi Ganesh:
Delhi Ganesh: "அஜித், விஜய் மாதிரி வரனும்னு நினைக்கனும்" நடிகர்களுக்கு டெல்லி கணேஷ் தந்த ஆலோசனை!
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Indira Soundararajan: அடுத்த அதிர்ச்சி; எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் திடீர் மறைவு- என்ன ஆச்சு?
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Kasturi: எஸ்கேப்! சர்ச்சைப் பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு - வலைவீசி தேடும் போலீஸ்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
Embed widget