Google Gemini AI: கூகுளின் ஜெமினி ஏஐ அறிமுகம்! சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளுமா? சிறப்பம்சங்கள் என்ன?
ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Google Gemini AI: ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜெமினி ஏஐ:
அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன். இதனை சாதாரண மக்களும் பயன்படுத்தும் விதமாக ஓப்பன் ஏஐ நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு சாட்ஜிபிடி எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. இது பயனாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று வெர்ஷன்களில் கூகுள் நிறுவனம் ஜெமினி ஏஐ தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro), நானோ (Nano) என்ற மூன்று வெர்ஷன்களில் ஜெமினி ஏஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Introducing Gemini 1.0, our most capable and general AI model yet. Built natively to be multimodal, it’s the first step in our Gemini-era of models. Gemini is optimized in three sizes - Ultra, Pro, and Nano
— Sundar Pichai (@sundarpichai) December 6, 2023
Gemini Ultra’s performance exceeds current state-of-the-art results on… pic.twitter.com/pzIw6iCPPN
சிறப்பு அம்சங்கள் என்ன?
இந்த ஜெமினி ஏஐ புகைப்படங்கள், ஆடியோ புரிந்துகொள்ளும் தன்மை கொண்டது. மேலும், சிக்கலான கணிதங்களை முடித்து வைக்கவும் உதவும். கணிதம், இயற்பியல், வரலாறு, சட்டம், மருத்துவம் என 57 பாடங்களின் சந்தேகங்களுக்கு தீர்வை கொடுக்கும். உலக அறிவு மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகிய இரண்டுமே உள்ளது என்று கூகுள் கூறியுள்ளது. மேலும், இந்த ஜெமினி ஏஐ-யால் கோடிங் (coding) எழுதவும் முடியும். மேலும், பைதான் (Python), ஜாவா (Java), சி++ (C++) மற்றும் கோ (G0) போன்ற கணினி மொழிகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டது. கேள்வி எந்த அளவிற்கு தெளிவாக உள்ளதோ ஜெமினி ஏஐ அளிக்கும் பதில்களும் அந்த அளவிற்கு தெளிவாக இருக்கும். இந்த ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தை சேர்ச் (Search), ஆட்ஸ் (ADS), க்ரோம் (Chrome), டூயட் (Duet) போன்றவைகளில் கொண்டு வருவதே கூகுளில் திட்டமாகும்.
மேலும், இந்த அம்சம் இணையம் இல்லாத டிவைஸ்களில் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த ஜெமினி ஏஐ தொழில்நுட்பம் ஏஐ தொடர்பான ஒரு விஷயத்திற்கு மட்டும் இல்லை, இது எல்லா இடங்களுக்குமான விஷயமாக மாறி வருகிறது. தற்போது அறிமுகமான ஜெமினி ஏஐ, சாட்சிபிடிவை பின்னுக்கு தள்ளுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க
Schools Colleges Holiday: 5ஆவது நாளாக விடுமுறை; சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுப்பு அறிவிப்பு