மேலும் அறிய

Schools Colleges Holiday: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - முழு விவரம் உள்ளே

Chennai Schools Colleges Holiday: புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (8.12.2023) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 வட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், வெள்ளம் சூழ்ந்து நிலைகுலைந்து போயின.

இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இதற்கிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழை கோரத் தாண்டவம் ஆடிய நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஐந்தாவது நாளாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (8.12.2023) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023  முதல் 7.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.  புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் இன்று (8.12.2023) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கும் விடுமுறை

அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 வட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் ஆகிய 6 வட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

மிக்ஜாம் புயல் காரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து கன மழை பெய்ததால் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இரண்டு வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay Stalin Meet: வீட்டுக்கு வந்த விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்
CM Vijay Stalin Meet: வீட்டுக்கு வந்த விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்
TN Assembly: அழுதுகொண்டே பதவியேற்ற பண்ருட்டி எம்எல்ஏ; யாருக்கு வணக்கம்? என்ன நடந்தது?  
TN Assembly: அழுதுகொண்டே பதவியேற்ற பண்ருட்டி எம்எல்ஏ; யாருக்கு வணக்கம்? என்ன நடந்தது?  
JCD Prabhakar: தமிழக சட்டசபை சபாநாயகராகும் இபிஎஸ், ஓபிஎஸ் நண்பர்.! யார் இந்த ஜேசிடி பிரபாகர்..?
தமிழக சட்டசபை சபாநாயகராகும் இபிஎஸ், ஓபிஎஸ் நண்பர்.! யார் இந்த ஜேசிடி பிரபாகர்..?
CM Vijay Stalin Meeting: ஸ்டாலின் வீட்டிற்கே நேரில் செல்லும் விஜய்.! அடுத்தடுத்து திருப்பம்- தமிழக அரசியலில் நடப்பது என்ன.?
ஸ்டாலின் வீட்டிற்கே நேரில் செல்லும் விஜய்.! அடுத்தடுத்து திருப்பம்- தமிழக அரசியலில் நடப்பது என்ன.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Stalin Meet: வீட்டுக்கு வந்த விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்
CM Vijay Stalin Meet: வீட்டுக்கு வந்த விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்
TN Assembly: அழுதுகொண்டே பதவியேற்ற பண்ருட்டி எம்எல்ஏ; யாருக்கு வணக்கம்? என்ன நடந்தது?  
TN Assembly: அழுதுகொண்டே பதவியேற்ற பண்ருட்டி எம்எல்ஏ; யாருக்கு வணக்கம்? என்ன நடந்தது?  
JCD Prabhakar: தமிழக சட்டசபை சபாநாயகராகும் இபிஎஸ், ஓபிஎஸ் நண்பர்.! யார் இந்த ஜேசிடி பிரபாகர்..?
தமிழக சட்டசபை சபாநாயகராகும் இபிஎஸ், ஓபிஎஸ் நண்பர்.! யார் இந்த ஜேசிடி பிரபாகர்..?
CM Vijay Stalin Meeting: ஸ்டாலின் வீட்டிற்கே நேரில் செல்லும் விஜய்.! அடுத்தடுத்து திருப்பம்- தமிழக அரசியலில் நடப்பது என்ன.?
ஸ்டாலின் வீட்டிற்கே நேரில் செல்லும் விஜய்.! அடுத்தடுத்து திருப்பம்- தமிழக அரசியலில் நடப்பது என்ன.?
Vijay Z+ Security: உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் CM விஜய் - NSG, CRPF, CISF - 55 பேர் அடங்கிய குழு, 24*7 மானிட்டரிங்
உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் CM விஜய் - NSG, CRPF, CISF - 55 பேர் அடங்கிய குழு, 24*7 மானிட்டரிங்
TN Assembly: உடைந்த அதிமுக; உறுதிப்படுத்திய சட்டமன்ற சம்பவம்- விஜய்க்கு ஸ்பெஷல் வணக்கம் வைத்த எஸ்.பி.வேலுமணி!
TN Assembly: உடைந்த அதிமுக; உறுதிப்படுத்திய சட்டமன்ற சம்பவம்- விஜய்க்கு ஸ்பெஷல் வணக்கம் வைத்த எஸ்.பி.வேலுமணி!
CM Vijay: உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் - வீடியோ வைரல்
உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் - வீடியோ வைரல்
விஜய் vs உதயநிதி.! சட்டசபையில் நேருக்கு நேர் சந்திப்பு- என்ன நடந்தது தெரியுமா.?
விஜய் vs உதயநிதி.! சட்டசபையில் நேருக்கு நேர் சந்திப்பு- என்ன நடந்தது தெரியுமா.?
Embed widget