மேலும் அறிய

'லெவல் 3 backpack'- பப்ஜி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய புதிய 15 நொடி டீசர்..!

Battlegrounds Mobile Indiaவின் ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் தற்போது 15 நொடி வீடியோ டீசர் வெளியாகியுள்ளது. அதில் லெவல் 3 backpack இடம்பெற்றுள்ளது

சீனா, செயலிகள் மூலமாக  இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு  மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் , அதன் பிறகு பப்ஜியின் இடத்தை பிடிக்க  CALL OF DUTY, FAUG-G  என நிறைய மொபைல் கேம் சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால் பப்ஜி இடம் நிரப்பப்படவில்லை. மீண்டும் பப்ஜியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. 

லெவல் 3 backpack'- பப்ஜி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய புதிய 15 நொடி டீசர்..!

அடுத்த அப்டேட்டாக பப்ஜி விளையாட்டின், இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது . இந்த புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கியுள்ளது பப்ஜி.  Battlegrounds Mobile India என்ற பெயரில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியுள்ளது. இதுவரை ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் தற்போது 15 நொடி வீடியோ டீசர் வெளியாகியுள்ளது. அதில் leval 3 backpack இடம்பெற்றுள்ளது

இது தடை செய்யப்பட்ட பப்ஜியில் இருந்தமிகப்பிரபலமான ஒன்று. அது புதிய கேமிலும் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. Battlegrounds Mobile Indiaவும் பப்ஜியை போலவே சுவாரஸ்யமானதாக இருக்குமென ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜூன் மாதம் Battlegrounds Mobile India ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Twitter Verification : ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்குவது எப்படி?

இந்தியாவுக்கான பிரத்யேக தயாரிப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பயனர்களையும், இந்திய சந்தையையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க இந்தியாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆன்லைன் விளையாட்டு என்றாலும் இந்திய எல்லையைத் தாண்டி யாருடனும் சேர்ந்து நாம் விளையாட முடியாது. முன்பு உலகளவில் யார் கூட வேண்டுமானாலும் இணைந்து விளையாடும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தமுறை பப்ஜி இந்தியாவுக்குள் மட்டுமே விளையாட முடியும். விளையாட்டில் எல்லை தாண்டி கூட்டணி வைக்க முடியாது எனக் கூறப்படுகிறது. 

லெவல் 3 backpack'- பப்ஜி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய புதிய 15 நொடி டீசர்..!

இந்த முறை பப்ஜி விளையாடுபவர்களுக்கான வயது வரம்பில் அந்நிறுவனம் கறார் காட்டுவதாக தெரிகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தானக இன்ஸ்டால் செய்து விளையாடும் முடியும் என்றும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்களின் அனுமதி பெற்றே விளையாடும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிகிறது.  வயதுவரம்பை தீர்மானிப்பதை பப்ஜி எந்த அளவுக்கு சாத்தியப்படுத்த முடியும் என்ற சந்தேகங்கள் எழுந்தாலும், வயதுவரம்பில் நிச்சயம் உரிய கட்டுப்பாடுகள் உண்டு என்றே கூறப்படுகிறது. அதுபோல 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஒருநாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும், அதேபோல ரூ.7000க்கு மேல் பப்ஜியில் செலவு செய்ய அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது

செல்போனுக்கு விளம்பரம் வந்து குவியுதா? இந்தாங்க சில டிப்ஸ்! உங்க செல்போன் இனி க்ளீன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் -  கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் - கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Embed widget