Twitter Verification : ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்குவது எப்படி?
ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ப்ளூ டிக் வழங்க முடிவு செய்துள்ளது ட்விட்டர். ப்ளூ டிக் பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ட்விட்டரில் உள்ள எல்லோருக்கும் பாலோயர்களை அதிகரிக்கும் ஆசை எப்படி இருக்குமோ அதே போல், ப்ளூ டிக் வாங்கும் ஆசையும் இருக்கும். பல்வேறு காரணங்களால் ப்ளூ டிக் வழங்கும் நடைமுறையை ட்விட்டர் நிறுத்தி வைத்திருந்தது.மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள், முக்கிய நபர்களுக்கு மட்டுமே இடைப்பட்ட காலத்தில் ப்ளூ டிக் வழங்கப்பட்டது. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ப்ளூ டிக் வழங்க முடிவு செய்துள்ளது ட்விட்டர்.
ப்ளூ டிக் பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- அரசாங்கம்
- செய்தித்துறை சார்ந்தோர், பத்திரிகையாளர்கள்
- பிரபல நிறுவனங்கள் , அமைப்புகள்
- நடிகர்கள்
- விளையாட்டு வீரர்கள்
- செயற்பாட்டாளர்கள், மாற்றத்தை உருவாக்குவோர்
விண்ணப்பிக்கும் முன் செய்ய வேண்டியது என்ன ?
- ட்விட்டர் பெயர் சரியாக இருக்க வேண்டும்
- ப்ரொஃபைல் படம் இருக்க வேண்டும்
- கவர் புகைப்படம் இருக்க வேண்டும்
- அக்கவுண்டில் மொபைல் அல்லது இ மெயில் இணைக்க வேண்டும்
- கடைசி 6 மாதங்களுக்குள் லாகின் செய்திருக்க வேண்டும்
- ஏதேனும் காரணத்துக்காக ட்விட்டர் உங்கள் மேல் நடவடிக்கை எடுத்திருக்க கூடாது
- கண்டிப்பாக ஒரு வெப்சைட் இருக்க வேண்டும்
- உங்களது அக்கவுண்ட் பலரால் ஈர்க்கப்படுவதாக இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பது எப்படி?
- உங்களது செட்டிங் ( Settings ) செல்லுங்கள்
- அங்கு அக்கவுண்ட் பகுதிக்கு செல்ல வேண்டும்
- வெரிபிகேஷன் செய்ய என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
- தொடங்கலாமா என கேட்கும்
- அதனை கிளிக் செய்து உங்களது தகவல்களை பதிவு செய்யவும்
- அடுத்து உங்களை பற்றி வெளியான செய்திகள் தொடர்பான லிங்கை இணைக்கவும்
- கடந்த 6 மாதத்தில் வெளியான மூன்று செய்தி லிங்குகள் அவசியம்
- உங்களது வெப்சைட் முகவரி மற்றும் அரசு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை இணைக்கவும்
அவ்வளவுதான் நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்கள்.. இனி காத்திருக்கவும். ட்விட்டரில் இருந்து நீங்கள் விண்ணப்பித்தற்கான மெயில் வரும். வெரிபை செய்யவில்லை என்றால் அது தொடர்பாகவும் மெயில் வரும்.
Also Read:கரையை கடக்கிறது அதி தீவிர புயல் ‘யாஸ்’ ; 11 லட்சம் பேர் பத்திரமாக வெளியேற்றம்... தமிழகத்திலும் தென்படும் பாதிப்புகள்!
ட்விட்டரில் வெரிபிகேஷன் வாங்கினாலும் கூட அதனை இழப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இது குறித்து கூறியுள்ள ட்விட்டர், வெரிபிகேஷன் வாங்கியுள்ள எந்த நபரோ நிறுவனமோ ட்விட்டர் விதிகளுக்கு எதிராக செயல்பட்டால் குறிப்பாக போலி செய்தி உள்ளிட்டவற்றை பரப்பினார் அவர்களது ப்ளூ டிக் திரும்பப் பெறப்படும் என கூறியுள்ளது. அதோடு அதிக முறை விதிகளுக்கு எதிராக செயல்படும் போது நிரந்தரமாக ப்ளூ டிக் திரும்பப் பெறப்பட்டு கணக்கை முடக்கவும் வாய்ப்புண்டு
ட்விட்டர் வெளியிட்டுள்ள வீடியோ :
So we’re baaaaaaaaaack
— Twitter Verified (@verified) May 20, 2021
Follow us for all things blue badge on this bird app pic.twitter.com/EUI81qCrr7