WTC 2021 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்திய அணி அறிவிப்பு..!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெறும் இந்திய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை நடைபெறும் நிலையில், இறுதி போட்டியில் களமிறங்கும் 11 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்திய அணி வீரர்கள்!
1) விராட் கோஹ்லி (கேப்டன்)
2) ரோகித் சர்மா
3) சுப்மன் கில்
4) புஜாரா
5) அஜிங்கியா ரஹானே
6) ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
7) அஸ்வின்
8) ரவீந்திர ஜடேஜா
9) பும்ரா
10) முகமது ஷமி
11) இஷாந்த் சர்மா
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) June 17, 2021
Here's #TeamIndia's Playing XI for the #WTC21 Final 💪 👇 pic.twitter.com/DiOBAzf88h
2 நாட்களுக்கு முன்பாக 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ரித்திமான் சாஹா, விஹாரி ஆகிய நான்கு வீரர்களை நீக்கிவிட்டு 11 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.
2 சுழல், 3 வேகம் - இந்தியாவின் வியூகம்
ஜடேஜாவா, அஸ்வினா என்ற விவாதம் நிறைவுக்கு வந்துள்ளது. இறுதி போட்டி நடைபெறும் சவுதாம்ப்டன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற தகவல் வெளிவரும் நிலையில், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறுதி போட்டியில் களமிறங்கிறது இந்திய அணி. அஸ்வின், ஜடேஜா இருவருமே பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள் என்பதால் இந்திய அணி பேட்டிங் வரிசை பலமாக காட்சியளிக்கிறது.
மேலும் முகமது சிராஜா இல்லை இஷாந்த் சர்மாவா என்கின்ற விவாதத்திற்கும் முற்று புள்ளி வைத்துள்ளது பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு. இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி, 300 விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்திய மிகவும் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மா இறுதி போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இந்திய அணியிலேயே மிகவும் மூத்த வீரரான இவரின் அனுபவம், இது போன்ற முக்கியமான போட்டிகளில் இந்திய அணிக்கு பெரும் அளவில் கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் அறிய : வருண பகவான் காட்டுவாரா Mode : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செக் வைக்கும் வானிலை!
ஏற்கனவே 2019 உலகக்கோப்பையின் போது அரையிறுதியில் இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் மோதிய போது மழை பெய்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை மாற்றியது ரசிகர்கள் மனதில் ஆறாத ரணமாக இருக்கிறது, இந்நிலையில் முதல் முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் மழையின் இடையூறு இருக்கக்கூடும் என்கின்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியை இது போன்று இறுதி போட்டியில் காண காத்துள்ள ரசிகர்களுக்கு, மகிழ்ச்சிக்கு மத்தியிலும் அது ஒன்று மட்டுமே கவலை தரும் விஷயமாக அமைந்துள்ளது.