IND vs NZ T20 WC Final: சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா?.. டி20 வேர்ல்டு கப் ஃபைனல் மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
IND vs NZ T20 WC Final: டி20 உலகக்கோப்பையில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதி போட்டி மெரினா பீச்சில் நேரலை செய்யப்பட உள்ளது.

IND vs NZ T20 WC 2026 Final: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இறுதிப்போட்டியில் மோதுகிறது. இந்தப் போட்டியை நாளை மெரினா கடற்கரையில் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை பைனல்: இந்தியா- நியூசிலாந்து மோதல்
விறுவிறுப்பாக நடந்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இரண்டு அணிகள் மோதும் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை நாட்டுப்புற பாடல், பெரிய மேளம், மல்லர் கம்பம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படுகிறது. நாளை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல மக்கள் கூட்டம் அங்கு அதிகமாக இருக்கும். தற்போது, கிரிக்கெட் போட்டியும் ஒளிபரப்பு செய்வதால் மெரினாவே கடலைபோல காட்சியளிக்கும்.
மெரினாவில் கலைவிழா
— Greater Chennai Corporation (@chennaicorp) March 6, 2026
இடம்: மெரினா கடற்கரை (விவேகானந்தர் இல்லம் எதிரே)
தேதி: 08-03-2026
5PM - 7PM
நாட்டுப்புற பாடல் | பெரிய மேளம் | மல்லர் கம்பம் | நடனம்
INDIA VS NEW ZEALAND FINALS LIVE TELECAST
7.00 TO 10.30 PM#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe |… pic.twitter.com/epBWJeuJeg
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















