சிட்டியிலே இவ்ளோ மைலேஜா? பட்ஜெட் விலையில் அசத்தும் TVS Radeon!
TVS Radeon பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பட்ஜெட் விலையில் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக திகழ்வது டிவிஎஸ் நிறுவனம். பட்ஜெட் விலையில், நல்ல மைலேஜ் தரும் வகையில் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பதில் டிவிஎஸ் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தின் TVS Radeon விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம். இந்த பைக்கில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது.
1. Radeon All Black Edition:
டிவிஎஸ் Radeon All Black Edition பைக்கின் விலை ரூபாய் 84 ஆயிரத்து 728. இதில் ட்ரம் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 113 கிலோ ஆகும். கருப்பு நிறத்தில் இந்த பைக் உள்ளது.
2. Radeon Drum:
இந்த Radeon Drum பைக்கின் விலை ரூபாய் 90 ஆயிரத்து 442 ஆகும். இதில் ட்ரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 113 கிலோ ஆகும். இந்த இரு சக்கர வாகனம் கருப்பு, சாம்பல், நீலம், சிவப்பு என மொத்தம் 5 வண்ணங்களில் விற்பனையில் உள்ளது.
3.Radeon Digital - Drum:
இந்த Radeon Digital - Drum பைக்கின் விலை ரூபாய் 94 ஆயிரத்து 695. இதில் ட்ரம் ப்ரேக்ஸ், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 113 கிலோ ஆகும். இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. கருப்பு, கருநீலம், கருஞ்சிவப்பு நிறங்களில் விற்பனையில் உள்ளது.
4. Radeon Digital - Disc:
இந்த Radeon Digital - Disc பைக்கின் விலை ரூபாய் 98 ஆயிரத்து 835. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 115 கிலோ ஆகும். இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது.
மைலேஜ்:
மேலே கூறிய பைக்குகளில் 109.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 63 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 4 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 10 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் உள்ளது. இதில் 8.08 பிஎச்பி குதிரை ஆற்றல் உள்ளது. அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.
எஸ்பிடி ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 18 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஆயில் டேம்ப்ட் ஷாக் அப்சார்பர், 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. 5 வருடங்கள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் வசதி இதில் இல்லை. ஸ்டாண்ட் அலார்ம் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகளே பொருத்தப்பட்டுள்ளது.




















