மேலும் அறிய

FIFA World Cup: பீலே முதல் க்ளோஸ் வரை… ஃபிஃபா உலகக்கோப்பையில் கலக்கிய ஜாம்பவான்கள் ஐந்து பேர்!

ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்க உள்ள நிலையில், பீலே முதல் மிரோஸ்லாவ் க்ளோஸ் வரை, உலகக் கோப்பைகளில் ஆதிக்கம் செலுத்திய ஐந்து வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

சர்வதேச கால்பந்தின் உயரிய கவுரவத்திற்காக 32 அணிகள் போராடும் ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்க உள்ளது. பீலே முதல் மிரோஸ்லாவ் க்ளோஸ் வரை, உலகக் கோப்பைகளில் ஆதிக்கம் செலுத்தி மற்ற வீரர்களில் இருந்து தனித்து நின்ற ஐந்து வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

FIFA World Cup: பீலே முதல் க்ளோஸ் வரை… ஃபிஃபா உலகக்கோப்பையில் கலக்கிய ஜாம்பவான்கள் ஐந்து பேர்!

பீலே (பிரேசில்)

எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோ, என்று பெயர் கொண்ட இவர், பீலே என்று பிரபலமாக அறியப்படுகிறார். கால்பந்து வரலாற்றில் மிகவும் கொண்டாடப்பட்ட வீரர்களில் ஒருவர். அவர் தனது 15 வயதில் 1956 இல் கொரிந்தியன்ஸுக்கு எதிராக சாண்டோஸ் எஃப்சிக்காக கால்பந்தாட்டத்தில் அறிமுகமானார். 1957 இல் தனது தேசிய அணியான பிரேசிலுக்காக அறிமுகமானதில் இருந்து அவர் அணி நான்கு FIFA உலகக் கோப்பைகளில் பங்கேற்று மூன்றில் கோப்பை வென்றது. உலகக் கோப்பையில் பிரேசிலுக்காக அவர் விளையாடிய 14 போட்டிகளில், பீலே 12 கோல்களை அடித்தார். பதினாறு வயதான பீலே தனது முதல் உலகக் கோப்பை தொடரிலேயே (1958) அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதிலும் அவர் அரையிறுதியில் ஹாட்ரிக் கோல் அடித்து இறுதிப் போட்டிக்கு செல்லவும், உலகக்கோப்பை வெல்லவும் பிரேசில் அணிக்கு உதவினார். இவர் வென்றது போல மூன்று உலகக்கோப்பைகளை வேறு எந்த நாட்டு வீரரும் வென்றதில்லை.

FIFA World Cup: பீலே முதல் க்ளோஸ் வரை… ஃபிஃபா உலகக்கோப்பையில் கலக்கிய ஜாம்பவான்கள் ஐந்து பேர்!

டியாகோ மாரடோனா (அர்ஜென்டினா)

அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்த காலத்தில், மரடோனா 1982, 1986, 1990 மற்றும் 1994 உலகக் கோப்பைகளில் பங்கேற்றார். மாரடோனா தனது திறமையால் அறியப்பட்ட வீரராக இருந்தாலும், 1986 WC காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான கோல் மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியது. அங்குதான் 'கடவுளின் கை' நிகழ்வு பிறந்தது. மரடோனா இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்தார், அதில் ஒரு கோல் கையால் அடித்தார்.

நடுவர் அதனை ஹெட் கோல் என்று நினைத்து கோல் கொடுத்துவிட்டார். ஆனால் ஆட்டம் முடிந்த பின்னர்தான் தெரிய வந்தது அது கையால் அடித்த கோல் என்று. அந்த போட்டியில் அவரது அணியான அர்ஜென்டினா போட்டியை 2-1 என வென்றது மட்டுமின்றி அந்த ஆண்டு உலகக் கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது. 1991 இல் போதைப்பொருள் பயன்படுத்துயதாக 15 மாதங்களுக்கு தடை செய்யப்பட்ட பின்னர்,பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த அர்ஜென்டினாவின் ஜாம்பவான் 1997 இல் தனது 37 வயதில் ஓய்வு பெற்றார்.

FIFA World Cup: பீலே முதல் க்ளோஸ் வரை… ஃபிஃபா உலகக்கோப்பையில் கலக்கிய ஜாம்பவான்கள் ஐந்து பேர்!

பாவ்லோ ரோஸ்ஸி (இத்தாலி)

முன்னாள் ஜுவென்டஸ் மற்றும் மிலன் வீரர் பாவ்லோ ரோஸி எல்லா காலத்திலும் சிறந்த முன்கள வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இத்தாலியன் 1982 இல் தனது தேசிய அணியில் பட்டத்தை வென்றதில் பெரிதாக அறியப்பட்டார். அதில் அவர் ஆறு கோல்களை அடித்து, தங்க காலணியை வென்றார். ஆனால் அவரது பயணமும் ஒரு விசித்திரமானதுதான். 1980 ஆம் ஆண்டில், ஸ்ட்ரைக்கர் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக கால்பந்தில் இருந்து தடை செய்யப்பட்டார், ஆனால் 1982 இல் ஜுவென்டஸ் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அவரது தண்டனை இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இறுதியில் அவர் இத்தாலியின் 1982 உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். ரோஸ்ஸி பிரேசிலுக்கு எதிராக ஹாட்ரிக் அடித்து இத்தாலியை அரையிறுதிக்கு கூட்டிச்சென்றார். இறுதிப் போட்டியில், ரோஸ்ஸி மேற்கு ஜெர்மனிக்கு எதிராக மூன்று கோல்களில் முதல் கோல் அடித்து இத்தாலிக்கு மூன்றாவது உலகக் கோப்பையை வாங்கித் தந்தார்.

FIFA World Cup: பீலே முதல் க்ளோஸ் வரை… ஃபிஃபா உலகக்கோப்பையில் கலக்கிய ஜாம்பவான்கள் ஐந்து பேர்!

ராபர்டோ பாகியோ (இத்தாலி)

அவர் இத்தாலிக்காக மிக முக்கியமான கோல் அடித்தவர்களில் ஒருவராக இருந்தாலும், பாக்ஜியோவின் பெயர் 1994 உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் தொடர்புடையதாக இருக்கும், அங்கு அவர் பிரேசிலுக்கு எதிரான ஷூட்அவுட்களில் தீர்க்கமான பெனால்டியைத் தவறவிட்டார். அவர் 1988 முதல் 2004 வரை இத்தாலிக்காக 56 போட்டிகளில் 27 கோல்களை அடித்தார் மற்றும் மூன்று வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த ஒரே இத்தாலியர் ஆவார். ஏப்ரல் 2004 இல் ஸ்பெயினுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் பாஜியோ தனது இறுதி சர்வதேசப் போட்டியில் விளையாடினார்.

FIFA World Cup: பீலே முதல் க்ளோஸ் வரை… ஃபிஃபா உலகக்கோப்பையில் கலக்கிய ஜாம்பவான்கள் ஐந்து பேர்!

மிரோஸ்லாவ் க்ளோஸ் (ஜெர்மனி)

நான்கு FIFA உலகக் கோப்பைகளில் பங்கேற்று, மிரோஸ்லாவ் க்ளோஸ் உலகக் கோப்பை ஜாகர்நாட் என்று அழைக்கப்படுகிறார். 'Salto(smersault)-Klose' என்ற புனைப்பெயர் கொண்ட அவர், 24 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி, அதிக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் ஜெர்மனியின் லோதர் மத்தாசுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். 137 ஆட்டங்களில் 71 கோல்களை அடித்துள்ள க்ளோஸ் ஜெர்மனியின் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை கொண்டிருக்கிறார். 24 போட்டிகளில் 16 கோல்கள் அடித்து, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். உலகக் கோப்பை 2002 இல் மூன்றாவது இடத்தைப் பிடித்து, 2006, 2010 என இரண்டு பதிப்புகளில் ரன்னர்-அப் ஆகி, இறுதியாக 2014 இல் அர்ஜென்டினாவை நேரத்தில் தோற்கடித்து உலகக் கோப்பை கோப்பையை வென்றுத்தந்தார் க்ளோஸ்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget