''சோஷியல் மீடியா கூட யூஸ் பண்ணல.. தங்கம் தான் இலக்கு'' - துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேக்கர்
ஒலிம்பி போட்டியில் தங்கம் பதக்கம் வெல்வதை தனது 5 வருட கனவாகக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேக்கர் தெரிவித்துள்ளார்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து தேர்வு செய்ய பட்ட வீரர்கள், குரோஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். அங்கிருந்து நேரடியாக டோக்கியா பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
இந்த ஒலிம்பி போட்டியில் தங்கம் வெல்வதை தனது 5 வருட கனவாககொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேக்கர் அவர்கள் விளையாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிட்ட வீடியோவில் பேசி உள்ளார். இதில் அவர் குறிப்பிட்டிருப்பது என்ன வென்றால், ஒலிம்பி போட்டிக்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். இந்த போட்டியில் தங்கம் வெல்வது கனவாக கொண்டு பயிற்சி செய்து வருகிறேன். இதனால் சமூக ஊடகங்களை கூட பயன்படுத்தாமல், முழு நேரமும் உடல் ஆரோக்கியம் மேம்படுத்துவதிலும், மன ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள் செய்வதாகவும் இவர் கூறினார். மேலும் எனது பயிற்சிகளுக்கு அரசு மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும், பயிற்சிக்கு தேவையான துப்பாக்கி மற்றும் இதர உபகரணங்களை வழங்குவதாகவும், அந்த வீடியோவில் இவர் குறிப்பிட்டு இருந்தார்.
மனு பேக்கர் அவர்கள் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் 15-18 வயது உடையவர்களுக்கு நடந்த மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள், இளைஞர் ஒலிம்பிக், டெல்லி உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற இவர் பெரும் நம்பிக்கையுடன் இப்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெற்று வருகிறார்.
கடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 6 வது இடத்தை பிடித்த இவர், இந்த போட்டிகளில் தங்கம் வெல்ல விரும்புவார். அதில் செய்த தவறுகளை சரி செய்ய அதிக முனைப்புடன் பயிற்சி செய்து வருகிறார்
ஹரியானவை சேர்ந்து 19 வயதான மனு பேக்கர் அவர்கள் இந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல் போட்டிகளில் களம் காண இருக்கிறார்.
ஒலிம்பிக்கில் பல்வேறு போட்டிகளில் தங்கம் வெல்லும் நம்பிக்கையுடன் அனைவரும் பயிற்ச்யில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக இங்கு பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழலில் குரோஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிற்சி அளிப்பதாக இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் (NRAI) கூறியுள்ளது
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டியை காண தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.