Pro Kabaddi 2023: டிபெண்டில் நம்பர் ஒன் இடத்தில் தமிழ் தலைவாஸின் சாஹில் குலியா.. எத்தனை புள்ளிகள் தெரியுமா?
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அதிக ரெய்டு புள்ளிகள் மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்றுள்ள வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
ப்ரோ கபடி 2023ல் நேற்றுடன் சென்னையில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது. நேற்று சொந்த மண்ணில் தனது கடைசி போட்டியை தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியிடம் 30-33 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
Game over, a tough loss. Thalaivas fought hard, and we back them in victories and defeats. Onward, Thalaiva clan.#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 | #CHEvGG pic.twitter.com/1jr8ickoCd
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 27, 2023
தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான போட்டிக்கு முன்பாக, தபாங் டெல்லி கேசி மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது. இதில், இரு அணிகளும் தலா 32 புள்ளிகளை பெற்றதால் போட்டி டிரா ஆனது. இந்த போட்டியின்போது டெல்லி அணியின் நட்சத்திர வீரர் நவீன் குமாருக்கு காயம் ஏற்பட்டது. இந்தநிலையில், சென்னையில் நடந்த இரண்டாம் சுற்றுக்கு பிறகு, ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அதிக ரெய்டு புள்ளிகள் மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்றுள்ள வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
ரெய்டு:
ரைடர்ஸ் லீடர்போர்டில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் மனிந்தர் சிங் 78 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை சேர்ந்த பவன் செஹ்ராவத் 76 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தபாங் டெல்லி கேசி அணிக்கு எதிரான 12 ரெய்டு புள்ளிகளை வென்ற ஜெய்ப்பூர் அணியின் அர்ஜூன் தேஷ்வால் ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
1. மனிந்தர் சிங் (பெங்கால் வாரியர்ஸ்) - 8 போட்டிகள் - 78 புள்ளிகள்
2. பவான் செஹ்ராவத் (தெலுங்கு டைட்டன்ஸ்) - 7 போட்டிகள் - 76 புள்ளிகள்
3. அர்ஜூன் தேஷ்வால் (பிங்க் பாந்தர்ஸ் ஜெய்ப்பூர்) - 8 போட்டிகள் - 76 புள்ளிகள்
4. சுரேந்தர் கில் (உபி யோதாஸ்) - 7 போட்டிகள் - 75 புள்ளிகள்
5. நவீன் குமார் (தபாங் டெல்லி) - 6 போட்டிகள் - 71 புள்ளிகள்
6. பரத் (பெங்களூர் புல்ஸ்) - 8 போட்டிகள் - 62 புள்ளிகள்
டிபெண்டர்:
தமிழ் தலைவாஸ் அணியின் சாஹில் குலியா இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி 32 டிபெண்ட் புள்ளிகளுடன் லீடர்போர்டில் நம்பர் 1 டிபெண்டராக உள்ளார். பெங்கால் வாரியர்ஸ் அணியின் ஷூபம் ஷிண்டே மற்றும் புனேரி அணியின் முகமதுரேசா ஷட்லூயி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸுக்கு எதிராக முறையே நான்கு மற்றும் 3 டிபெண்ட் புள்ளிகளை பெற்ற குஜராத் அணியின் சோம்பிர் மற்றும் ஃபாசல் அட்ராச்சலி முறையே 4 வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர். ஜெய்ப்பூர் பிங்கு பாந்தர்ஸ் அணியின் இளம் வீரர் அங்குஷ் இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
சாஹில் குலியா(தமிழ் தலைவாஸ்) :
சாஹில் புடில இருந்து தப்பிக்க முடியுமா?#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 | #CHEvHS pic.twitter.com/k6ke0GzzED
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 26, 2023
1.சாஹில் குலியா (தமிழ் தலைவாஸ்) - 8 போட்டிகள் - 32 புள்ளிகள்
2. ஷுபம் ஷிண்டே (பெங்கால் வாரியர்ஸ்) - 8 போட்டிகள் - 29 புள்ளிகள்
3. முகமதுரேசா ஷட்லூயி (புனேரி) - 7 போட்டிகள் - 25 புள்ளிகள்
4. சோம்பிர் (குஜராத்) - 8 போட்டிகள் - 24 புள்ளிகள்
5. ஃபாசல் அட்ராச்சலி (குஜராத்) - 8 போட்டிகள் - 23 புள்ளிகள்
6. அங்குஷ் (ஜெய்ப்பூர்) - 8 போட்டிகள் - 23 புள்ளிகள்