மேலும் அறிய

PV Sindhu Wins Bronze Medal: மகிழ்ச்சி அடைவதா?... வருத்தப்படுவதா? - வெற்றிக்கு பின் பி.வி.சிந்து.!

நான் வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். பல வருடங்கள் கடுமையாக உழைத்தேன். நான் நன்றாக விளையாடினேன் என்று நினைக்கிறேன்.

வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அல்லது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது குறித்து வருத்தப்பட வேண்டுமா? என்று டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஹீ பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் இதுவரை 15 முறை மோதியுள்ளனர். அதில் ஹீ பிங் 9 முறையும் சிந்து 6 முறையும் வென்றுள்ளனர். ஒலிம்பிக் வெண்கலப்பதக்க போட்டி என்பதால் இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் கேமை பி.வி.சிந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  முதல் கேமை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தினார். 

அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் சிந்துவின் இரண்டவது பதக்கம் இதுவாகும். சிந்துவின் வெற்றியை அடுத்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துமழை குவிந்து வருகின்றது. 

இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றது குறித்து பி.வி.சிந்து பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். பல வருடங்கள் கடுமையாக உழைத்தேன். நான் நன்றாக விளையாடினேன் என்று நினைக்கிறேன். நான் நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அல்லது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது குறித்து வருத்தப்பட வேண்டுமா?” என்று கூறினார்.

முன்னதாக, சிந்துவின் வெற்றி குறித்து அவரது தந்தை பி.வி.ரமணா நமது ஏபிபிக்கு அளித்த பேட்டியில், “நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஊடகங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நேற்று நான் அவளை மிகவும் ஊக்கப்படுத்தினேன். ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் பெண்மணி அவர் என்பதில்  மகிழ்ச்சியடைகிறேன். நேற்றைய போட்டிக்குப் பிறகு அவள் கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால் அவளுடைய இன்றைய போட்டியில் கவனம் செலுத்தச் சொன்னேன். நான் அவளை ஊக்கப்படுத்தி பேசினேன். ஒட்டுமொத்தமாக அவள் அரங்கத்தில் ஆக்ரோஷமாக இருந்தாள். நான் மீண்டும் மீண்டும் சில ஸ்ட்ரோக்குகளை விளையாடுவதை அவளிடம் சொன்னேன். நாம் அவளை மகிழ்விக்க வேண்டும். அவர் அடுத்த ஒலிம்பிக்கிலும் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். அவளிடமிருந்து எந்த சிறப்பு கோரிக்கையும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார். 

மேலும், வெண்கலம் தங்கத்திற்கு சமம் என்றும், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் எனவும் சிந்துவின் தாயார் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Embed widget