Paris Olympics: பிரிட்டனை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி.. அரையிறுதிக்கு முன்னேற்றம்!
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 3 வெண்கலப்பதக்கங்களை வென்றது. இச்சூழலில் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற அரையிறுதியில் இடம் பிடிப்பதற்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.
𝕮𝖔𝖒𝖊𝖙𝖍 𝖙𝖍𝖊 𝖍𝖔𝖚𝖗, 𝖈𝖔𝖒𝖊𝖙𝖍 𝖙𝖍𝖊 𝖒𝖊𝖓
— India_AllSports (@India_AllSports) August 4, 2024
⚡️⚡️⚡️ HOCKEY: INDIA storm into SEMIS ⚡️⚡️⚡️
Playing with 10 players, India BEAT Great Britain in a thrilling QF match. #Hockey #Paris2024 #Paris2024withIAS pic.twitter.com/JSVNI8kLqq
அரையிறுதியில் இந்தியா:
பெனால்டி ஷுட் அவுட் முறையில் நடந்த ஆட்டத்தில் 4 - 2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி சுற்றில் இந்திய அணி விளையாட உள்ளது.
அரையிறுதி போட்டியில் இந்திய அணி நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி மற்றும் ரியோ 2016 வெற்றியாளரான அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான மற்றொரு காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.