மேலும் அறிய
Advertisement
தேசிய அளவிலான தற்காப்புகலை போட்டி - 8 தங்கம், 12 வெள்ளி வென்ற மதுரை மாணவர்களுக்கு பாராட்டு
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்புகலை போட்டிகள் - 8 தங்கம், 12 வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை சிலம்பாட்ட மாணவர் அணிக்கு ரயில்வே நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.
தேசிய இளைஞர் விளையாட்டு மற்றும் கல்வி கூட்டமைப்பு சார்பில் கோவா மாநிலத்தில் கடந்த 2-ஆம் தேத முதல் 4-ஆம் தேதிவரை தேசிய அளவிலான தற்காப்பு கலை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை, ஜூடோ, டேக்வோண்டோ, ரெஸ்லின் போன்ற பல்வேறு தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.
#madurai | கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்புகலை போட்டிகள் - 8 தங்கம், 12 வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை சிலம்பாட்ட மாணவர் அணிக்கு ரயில்வே நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.
— arunchinna (@arunreporter92) October 8, 2022
Further report's to follow - @abpnadu@drmmadurai | @SSluwing @MaduraiNewsj @MaruthupandiN2 @ABPNews pic.twitter.com/qLYpgUHdN4
இந்த சிலம்பம் போட்டி பிரிவில் மதுரையை சேர்ந்த யுவன் சிலம்பம் அகாடாமியை சேர்ந்த 15 சிலம்பாட்ட மாணவர்கள் 8,10,12, 14,17,19 ஆகிய வயதினற்கான ஆண்கள், பிரிவு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதனையடுத்து சிலம்பாட்ட பிரிவில் மதுரையை சேர்ந்த மாணவர்களான
பிரதீப், சந்தோஷ் குமார், பிரகதீஷ்வரன் தருண், சிவா, லோகேஷ்குமார், சல்மான், கிருத்திகேஷ், தினேஷ்குமார், வாசு தேவன், மகிஸ் ராம், சபரி, ஹரிஷ், ரித்தீஷ்குமார், பிரசன்னா ஆகிய மாணவர்கள் 8 தங்க பதக்கத்தினையும், 12 வெள்ளி பதக்கத்தினையும் வெற்றி பெற்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பராமரிப்பு பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் - முழு விவரம்
இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் தெற்காசிய அளவில் நடைபெறவுள்ள தற்காப்பு கலை போட்டியிலும், அதன் பின்னர் மலேசியா, இலங்கை, நேபாள ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் போட்டிகளிலும் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தற்காப்பு கலை போட்டிகளில் பதக்கங்களை வென்று மதுரை திரும்பிய மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டுதல் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion