மேலும் அறிய

பராமரிப்பு பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் - முழு விவரம்

சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.

வெள்ளனூர் - புதுக்கோட்டை, மானாமதுரை - மேல கொன்னகுளம், திண்டுக்கல் - அம்பாத்துரை ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே அக்டோபர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக  திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை  ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

பராமரிப்பு பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் - முழு விவரம்
 
திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை  கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது. ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில்  ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை  முழுமையாக ரத்து செய்யப்படும்.

பராமரிப்பு பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் - முழு விவரம்
 
மேலும் கொடைக்கானல்ரோடு ரயில் நிலையத்தில் நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 10 முதல் அக்டோபர் 15 வரை மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
மதுரை வடக்கு எம்எல்ஏ அதிரடி: அரசுத்துறையிலும் லஞ்சம் கேட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என புகார் எண் அறிவிப்பு !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget