Dhoni advise to Jadeja | தோனி கொடுத்த அட்வைஸ் - ஆட்டத்தை மாற்றிய ரவீந்திர ஜடேஜா!
இந்தியாவின் நம்பர் 1 ஆல் ரவுண்டர் என்னும் அந்தஸ்து ஜடேஜாவிற்கு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை
தற்போதைய நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தான் இந்தியாவின் நம்பர் 1 ஆல் ரவுண்டர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் நம்பிக்கையாக திகழ்கிறார்.
அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு களமிறங்கிய ஜடேஜா, கடைசி ஓவரில் 36 ரன்கள் விளாசி ஐபிஎல் தொடரில் கிறிஸ் கையில் படைத்த முந்தைய சாதனையை சமன் செய்தார். இந்நிலையில் அடுத்தது இந்திய அணி சந்திக்க இருக்கும் மிக பெரிய சவால், உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி. இதில் ஜடேஜா என்ன செய்ய உள்ளார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அனால் இந்த நம்பர் 1 ஆல் ரவுண்டர் என்னும் பெயர் ஜடேஜாவிற்கு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. 2009ம் ஆண்டே இந்திய அணிக்கு ஜடேஜா தேர்வாகிவிட்ட சூழலில், கடைசி சில வருடங்களாகவே ஜடேஜா இந்த நம்பிக்கையை சம்பாதித்துள்ளார்.
பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனை நயோமி ஒசாகா ஏன் விலகினார்? தெரிஞ்சா அசந்து போவீங்க!
இது குறித்து அண்மையில் மனம் திறந்துள்ள ரவீந்திர ஜடேஜா, 2015 உலகக்கோப்பை தொடரின் போது தோனி கொடுத்த அட்வைஸ் தான் மாற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார். "தோனி என்னிடம் சொன்னது நினைவிருக்கிறது, ஆரம்ப காலத்தில் எந்த பந்தை அடிப்பது, எதை விடுவது என்ற இரட்டை மனநிலை என்னிடம் இருக்கும், அது தவறு என்பதை உணர்ந்தேன்" என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
மேலும் "ஆனால் தற்போது நான் நேரம் எடுத்துக்கொண்டு விளையாட விரும்புகிறேன், தெளிவான மனநிலை இருக்கிறது, வேகமாக ரன்களை இறுதியில் சேர்க்க முடியும் என நம்புகிறேன், இந்த மாறுதல் தான் எனக்கு உதவியுள்ளது" என தற்போதைய சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக ஜடேஜா இந்த விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஷாட் பந்துகளை எதிர்கொள்வதில் தோனியின் ஆலோசனை கை கொடுத்துள்ளதாக ஜடேஜா தெரிவித்துள்ளார். "ஷாட் பந்துகளை எதிர்கொள்வதில் எனக்கு பிரச்சனை இருந்ததாக என்றுமே உணர்ந்ததில்லை, ஷாட் பந்தை சிக்ஸர் விளாசும் போது தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும். ஆனால் சரியான பந்தை சரியாக எதிர்கொள்ள வேண்டும்" என தன்னுடைய ஆட்டத்தை மேன்படுத்தியுள்ளது குறித்தும் தெரிவித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜாவை பொருத்தவரை சுமார் 4582 ரன்கள், 437 விக்கெட்கள் தற்போது வரை வீழ்த்தியுள்ளார். 19 வயதிற்குற்பட்டோர் வெற்றி பெற்ற இந்திய அணியில் விராட் கோலி தலைமையில் ஜடேஜா விளையாடி இருந்தார். பின்னர் தோனி தலைமையில் இந்திய அணிக்கு தேர்வான ஜடேஜா, தற்போது சிறந்த ஆல் ரவுண்டர் என்ற அந்தஸ்துடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் வலம் வருகிறார்.