மேலும் அறிய
Advertisement
100 ஐபிஎல் போட்டிகளை வென்று கொல்கத்தா நைர் ரைடர்ஸ் அணி சாதனை
நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல் போட்டியில் 100வது வெற்றியை ருசித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாதனை படைத்தது.
14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஹைதராபாத் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. இதையடுத்து, விளையாடிய ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 100ஆவது வெற்றியை பதிவு செய்த அணியாக கொல்கத்தா மாறியது.
120 ஐபிஎல் போட்டிகளை வென்று மும்பை இந்தியன்ஸ் முதலிடத்திலும், 106 போட்டிகள் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தற்போது, அந்த சாதனைப்பட்டியலில், மூன்றாவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion