மேலும் அறிய

மீண்டும் மும்பை டாமினேஷன்? கோலி வெளியேறவும்... ரோஹித் தேர்வாகவும் லாபி காரணமா?

இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பங்கு எப்போதும் அதிகமாகவே இருந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் ஒரு முக்கியமான இடம் என்றால் அது மும்பைக்கு உண்டு. ஏனென்றால் மும்பை கிரிக்கெட் அணி இந்தியாவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக இன்று வரை இருந்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 41 முறை கோப்பையை வென்று மும்பை அணி ஒரு மகத்தான சாதனையை தன் வசம் வைத்துள்ளது. அத்துடன் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் வீரர்களை மும்பை கிரிக்கெட் அணி தந்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் இந்திய டி20 அணியின் கேப்டனாக மும்பை வீரர் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. 

இந்நிலையில் இதுவரை மும்பையில் இருந்து இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்கள் யார் யார்? எப்படி மும்பை அணி இப்படி ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது?

மும்பையும் கிரிக்கெட்டும்:

மும்பையில் இருந்து வருபவர்கள் தங்களுடைய கிரிக்கெட் விளையாட்டை மிகவும் அதிகம் நேசித்து விளையாடுபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்து விளையாட வேண்டும் என்பதை ஒரு மிகப்பெரிய இலக்காக வைத்து பயிற்சியை தொடங்குவார்கள். அதன் காரணமாக பாலி உம்ரிகர், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கர், ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர்,வினோத் காம்ப்ளி, அகர்கர்,ரோகித் சர்மா, ரஹானே  போன்ற பல சிறப்பான வீரர்கள் உருவெடுத்தனர். மும்பை அணி 40 முறைக்கு மேல் ரஞ்சி கோப்பையை வெல்ல இப்படி நல்ல வீரர்களை தயார் செய்தது ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. வேறு எந்த மாநிலத்திலிருந்தும் இத்தனை வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் கொடி கட்டி பறந்தது இல்லை. மற்ற மாநிலங்களில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் அவ்வப்போது இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தவது இருந்தாலும் அது எல்லாம் மிகவும் குறைவான ஒன்று. சிவாஜி பார்க் மற்றும் ஆசாத் மைதான் ஆகிய இரண்டு மைதானங்களும் பல மும்பை வீரர்களை உருவாக்கிய முக்கியமான இடங்கள் ஆகும். 

மீண்டும் மும்பை டாமினேஷன்? கோலி வெளியேறவும்... ரோஹித் தேர்வாகவும் லாபி காரணமா?

மும்பையில் இருந்து இந்தியா அணியின் கேப்டன்கள்:

இந்திய கிரிக்கெட் அணியை மும்பையில் இருந்து வழி நடத்திய வீரர்களின் பட்டியல் மிகவும் நீளமான ஒன்று. பாலி உம்ரிகர், சந்து போர்டே,வினோ மன்கட், அஜித் வாடேகர், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கார், ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர்,ரோகித் சர்மா,ரஹானே என இத்தனை பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர். 

வீரர்கள் தேர்வில் மும்பையின் ஆதிக்கம்:

1980களில் தொடங்கி இந்தியா கிரிக்கெட் அணியில் மும்பை,டெல்லி,பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களில் இருந்தே அதிக வீரர்கள் இடம்பெற்றனர். இதில் முதலிடத்தில் எப்போதும் மும்பை தான் இருக்கும். மும்பையில் இருந்து பல்வேறு வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் இடம்பெற்று கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது சுனில் கவாஸ்கர் பிசிசிஐயில் அதிக ஆதிக்கம் செலுத்தியதாக அப்போது இந்திய அணியில் இடம்பெற்று இருந்த பிஷன் சிங் பேடி வெளிப்படையாக சில குற்றச்சாட்டுகளை வைத்தார். குறிப்பாக 1980களில் திலீப் தோஷிக்கு காயம் ஏற்பட்ட போது இடது கை சுழற்பந்துவீச்சாளராக தன்னை அழைக்காமல் ரவி சாஸ்திரியை அழைக்க கவாஸ்கர் தான் முடிவு எடுத்தார் என்று கூறினார். இதை தற்போது வரை கவாஸ்கர் மறுத்து வருகிறார். 

மீண்டும் மும்பை டாமினேஷன்? கோலி வெளியேறவும்... ரோஹித் தேர்வாகவும் லாபி காரணமா?

எனினும் இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் தேர்வின் போது அந்த ஆதிக்கம் தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது. 2001ஆம் ஆண்டிற்கு பின்பு மேற்கு வங்கத்தில் இருந்து கங்குலி இந்திய கேப்டனாக பொறுப்பு ஏற்றார். அவருக்கு அடுத்து டிராவிட், தோனி மற்றும் கோலி உள்ளிட்ட வீரர்களின் கேப்டனாக இருந்தனர். இதனால் இந்திய அணியில் மும்பையின் ஆதிக்கம் சற்று குறைந்தது காணப்பட்டது. தற்போது மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு மும்பையில் இருந்து ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக வர உள்ளார். ஆகவே மீண்டும் மும்பையின் ஆதிக்கம் பிசிசிஐயில் வருமா என்ற கேள்வியும் எழ தொடங்கியுள்ளது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். 

மேலும் படிக்க: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் வீராட் கோலி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs DC LIVE Score: அடித்து ஆடும் டெல்லி..விக்கெட் எடுக்குமா லக்னோ?
LSG vs DC LIVE Score: அடித்து ஆடும் டெல்லி..விக்கெட் எடுக்குமா லக்னோ?
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகலRahul Gandhi on Modi | ‘’அதானிக்கு 7 ஏர்போர்ட்..டெம்போல பணம் வந்துச்சா மோடி?” ராகுல் THUGLIFE!Banana Farming | தருமபுரியில் கொளுத்தும் வெயில்! காய்ந்து விழுந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வருத்தம்Felix Gerald House Raid | FELIX வீட்டில் அதிரடி சோதனைடென்ஷன் ஆன மனைவிபோலீசாருடன் கடும் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs DC LIVE Score: அடித்து ஆடும் டெல்லி..விக்கெட் எடுக்குமா லக்னோ?
LSG vs DC LIVE Score: அடித்து ஆடும் டெல்லி..விக்கெட் எடுக்குமா லக்னோ?
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget