மேலும் அறிய

Points Table IPL 2023: 4வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு.. அடிசறுக்கிய மும்பை.. புள்ளி பட்டியல் நிலவரம் உங்களுக்காக!

Points Table IPL 2023: ஐபிஎல் தொடரில் 6வது சதத்தை அடித்த விராட் கோலி, 538 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் 2023 சீசனின் 65வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. 

இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை 5வது இடத்திற்கு தள்ளி, புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. மேலும், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டது. 

குஜராத் டைட்டன்ஸ் 13 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 13 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்றுள்ளது. இப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் தலா 14 புள்ளிகளுடன் 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளனர். 

இந்தநிலையில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்று பார்க்கலாம்.

  1. குஜராத் டைட்டன்ஸ்:  13 போட்டிகள் - 9 வெற்றி
  2. சென்னை சூப்பர் கிங்ஸ்: 13 போட்டிகள்- 7 வெற்றி
  3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 13 போட்டிகள்- 7 வெற்றி
  4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 13 போட்டிகள் - 7 வெற்றி
  5. மும்பை இந்தியன்ஸ்: 13 போட்டிகள் - 7 வெற்றி
  6. ராஜஸ்தான் ராயல்ஸ்: 13 போட்டிகள்- 6 வெற்றி
  7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 13 போட்டிகள் - 6 வெற்றி
  8. பஞ்சாப் கிங்ஸ்: 13 போட்டிகள் - 6 வெற்றி
  9. டெல்லி கேபிடல்ஸ்: 13 போட்டிகள் - 5 வெற்றி
  10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 13 போட்டிகள் - 4 வெற்றி

ஆரஞ்சு கேப்: 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் 702 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதே நேரத்தில், ஐபிஎல் தொடரில் 6வது சதத்தை அடித்த விராட் கோலி, 538 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். இவர்களை தவிர சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டெவான் கான்வே ஆகியோ டாப் 5 இடங்களில் உள்ளனர். 

  1. (ஆர்சிபி) ஃபாஃப் டு பிளெசிஸ் - 702 ரன்கள் (13 போட்டிகள்)
  2. (ஜிடி) ஷுப்மான் கில் - 576 ரன்கள் (13 போட்டிகள்)
  3. (ஆர்ஆர்) யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 575 ரன்கள் (13 போட்டிகள்)
  4. (ஆர்சிபி) விராட் கோலி - 538 ரன்கள் (13 போட்டிகள்)
  5. (சிஎஸ்கே) டெவோன் கான்வே - 498 ரன்கள் (13 போட்டிகள்)

பர்பிள் கேப்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டிக்கு பிறகு பர்பிள் கேப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றமில்லை. நேற்றைய போட்டியில் பெங்களூரு வீரர் முகமது சிராஜ் 1 விக்கெட்கள் மட்டும் எடுத்தார். இதன்மூலம், 13 போட்டிகளில் 17 விக்கெட்களுடன் பர்பிள் கேப்பில் 8வது இடத்திற்கு முன்னேறினார். குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் முகமது ஷமி 23 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

  1. (ஜிடி) முகமது ஷமி - 23 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)
  2. (ஜிடி) ரஷித் கான் - 23 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)
  3. (ஆர்ஆர்) யுஸ்வேந்திர சாஹல் - 21 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)
  4. (எம்ஐ) பியூஷ் சாவ்லா - 20 விக்கெட்டுகள் (32 போட்டிகள்)
  5. (கேகேஆர்) வருண் சக்கரவர்த்தி - 19 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget