![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Virat kohli: என்றும் மரியாதையுடன்...- தோனி குறித்து மனம் உறுகிய கோலி: நெகிழ்ந்த ரசிகர்கள்!
சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது தொடர்பாக விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
![Virat kohli: என்றும் மரியாதையுடன்...- தோனி குறித்து மனம் உறுகிய கோலி: நெகிழ்ந்த ரசிகர்கள்! IPL 2022: Virat kohli and Virender Sehwag reacts after Dhoni stepped down from Chennai Super kings captaincy Virat kohli: என்றும் மரியாதையுடன்...- தோனி குறித்து மனம் உறுகிய கோலி: நெகிழ்ந்த ரசிகர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/24/4ccef701d6e7f39e74a76a00bca92dbb_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை அணியின் இந்த திடீர் அறிவிப்பு தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இது தொடர்பாக ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “மஞ்சள் நிற ஜெர்ஸியில் சிறப்பான கேப்டனாக நீங்கள் செயல்பட்டீர்கள். இந்த காலத்தை ரசிகர்கள் எளிதில் மறக்கமாட்டார்கள். என்றும் மரியாதையுடன்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு ரசிகர்களிடம் வேகமாக வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “ஐபிஎல் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த பிராண்டாக சென்னை மற்றும் தோனி அமைந்தன. சென்னை மற்றும் தல தோனி இடையேயான பந்தம் தொடர்ந்து இருக்கும். சென்னை அணி கேப்டான தோனியை பெற்றது பெரிய பாக்கியம். அதேபோன்று அந்த நகரத்திலிருந்து அவருக்கு கிடைத்த அன்பு மிகவும் அற்புதமானது” எனப் பதிவிட்டுள்ளார்.
One of the great stories of the brand that is Indian Premier League. Thala Dhoni and Chennai will remain a connection like very few. Chennai was fortunate to have a leader like him and the support and love he has got from owners and the city has been unbelievable. pic.twitter.com/aQ4JUbDLcs
— Virender Sehwag (@virendersehwag) March 24, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)