Dinesh Karthik : டாபர் நாய் போல் இருக்கும் இந்திய அணி.. வால் இல்லாத வீரர்கள்.. தினேஷ் கார்த்திக் விமர்சனம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், இந்திய அணி டாபர் நாய் போல் இருப்பதாக தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று பரிதாபத்திற்குரிய நிலையில் தவிக்கிறது. இந்திய அணியில் இளம் வீரர்கள் மட்டுமே அதிகம் இடம்பிடித்துள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. மேலும், 11 பேர் ஆட்டத்தையும் ஜஸ்பிரிட் பும்ராவால் ஆட முடியாது என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர் நாயுடன் ஒப்பிட்டி இந்திய அணியை விமர்சித்துள்ளார்.
இந்திய அணிக்கு என்ன ஆச்சு?
முதலில் ஆடிய இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆனால், முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இந்திய அணியின் பேட்டர்களின் வரிசையில் சிக்கல் இருப்பதை உணர முடிந்தது. முதல் இன்னிங்சில் கருண் நாயர், சாய் சுதர்சன் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அதை பேன்று மிடில் ஆர்டரை தாண்டி அடுத்து வரும் வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதுவே இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன் குவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு இன்னிங்சிலும் ரிஷப் பந்த், கே.எல்,ராகுல் சதங்களை விளாசியும் வீண் ஆனது.
சொதப்பும் பவுலர்கள்
இந்திய அணியில் பும்ராவை தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. குறிப்பாக ஸ்பின் பவுலிங் கூட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களிடம் எடுபடவில்லை என்பது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி தான். முதல் டெஸ்ட் போட்டியில், பும்ரா மட்டுமே ஓரளவுக்கு ஃபார்மில் இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். விக்கெட் எடுப்பதிலும் தடுமாறியதை உணர முடிந்தது. இப்படியான சூழலில் கில் இளம்படையை வைத்து இரண்டாவது டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கில் என்ன முடிவு எடுப்பார் என்ற சிக்கலும் எழுந்திருக்கிறது.
டாபர் மேன் நாயுடன் ஒப்பிட்ட வீரர்
இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், டாபர்மேன் நாய் போல் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இருக்கிறது. முன்பகுதி மற்றும் நடுப்பகுதி நன்றாக உள்ளது. ஆனால், வால் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கீழ்வரிசை வீரர்கள் (Tailenders) சரியாக விளையாடததால் அதனை டாபர் நாயுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். அவரை தொடர்ந்து பல முன்னணி வீரர்களும் கில்லிற்கு ஆலோசனை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.





















