MS Dhoni vs Gambhir: பழைய பகையா? அதெல்லாம் இல்லை! 2026 உலகக் கோப்பை வெற்றியில் ஒன்றிணைந்த இரு துருவங்கள்
MS Dhoni vs Gautam Gambhir: இந்திய அணிக்கும் வாழ்த்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கும் வாழ்த்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலளித்து கமெண்ட் செய்துள்ளார்.
இந்திய அணி சாம்பியன்
ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி நடப்பு சாம்பியனான இந்திய அணி, மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.இந்த வெற்றிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்,எஸ் தோனி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவை ஒன்றை வெளியிட்டு இருந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தலைமைப் பயிற்சியாளர் கம்பீரை பாராட்டி இருந்தார்
கம்பீரை பாராட்டிய தோனி:
அதில், “அகமதாபாத்தில் வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும், பயிற்சியாளர் குழுவிற்கும், உலகம் முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் விளையாடுவதை பார்ப்பது என்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. பயிற்சியாளரே உங்கள் முகத்திற்கு சிரிப்பு நன்றாக உள்ளது. தீவிரத்தன்மையுடன் கூடிய மகிழ்ச்சி என்பது மிகவும் பயங்கரமான கலவை. நல்லபடியாக செய்து முடித்திருக்கிறீர்கள். கொண்டாடுங்கள் நண்பர்களே. பும்ராவை பற்றி நான் எதுவும் எழுதாமல் இருப்பதே நல்லதே. சாம்பியன் பந்துவீச்சாளர்” என தோனி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தோனிக்கு கம்பீரின் பதில்
தனது முன்னாள் கேப்டனின் மெசேஜுக்கு கம்பீர் உடனடியாகப் பதிலளித்தார். இந்தியா மற்றுமொரு உலகக் கோப்பையை வென்ற அந்த முக்கிய தருணத்தையும், தோனியின் வருகையையும் அங்கீகரிக்கும் விதமாக அவர் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்த கம்பீர் "புன்னகைப்பதற்கு இதைவிடச் சிறந்த காரணம் என்ன இருக்க முடியும்? உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி."
Look what all the World Cup win has given us. A heartwarming Thala x Gauti moment on Instagram. We have seen it all! 🥹😂 pic.twitter.com/CHlpgZBkkL
— Mama (@SriniMaama16) March 9, 2026
பகையெல்லாம் இல்லை
பல ஆண்டுகளாக இவர்களது உறவு குறித்துப் பல்வேறு வதந்திகளும் ஊகங்களும் நிலவி வந்த நிலையில், இருவருக்கும் இடையிலான இந்த நட்பு ரீதியான உரையாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2011 ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக தோனி அடித்த வெற்றி சிக்ஸர் குறித்து கம்பீர் முன்பு கூறிய சில கருத்துகளால், இவர்களது உறவு குறித்து ரசிகர்கள் நீண்ட காலமாக விவாதித்து வந்தனர்.
இருப்பினும், இந்தியாவின் தற்போதைய உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த இந்த கலகலப்பான உரையாடல், இந்திய கிரிக்கெட்டின் இந்த இரண்டு முக்கிய ஆளுமைகளுக்கும் இடையே ஒரு சுமூகமான மற்றும் நட்பு ரீதியான உறவு இருப்பதை உணர்த்துகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















