விராட் கோலியுடன் டேட்டிங் செய்த நடிகை.. திடீரென வைரலாகும் புகைப்படம்.. எமோஷனல் ஆன ரசிகர்கள்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் பிரேசில் நாட்டு நடிகையின் புகைப்படமும் சேர்ந்து இணையத்தில் வைரலானதை கண்டு ரசிகர்கள் செம ஷாக்.

பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் வெளிநாட்டு நடிகையுடன் 2 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்ததாக வெளியான செய்தியறிந்து அவரது ரசிகர்கள் அப்போ அவருக்கு முதல் காதல் பெய்லியர் தானா என சோகத்துடன் எமோஜிக்களை பகிர்ந்து டிரெண்டிங்காக்கி வருகின்றனர். இப்போதும் அந்த பிரபலமான கிரிக்கெட் வீரர் பிரபல நடிகையை திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவரும் அவர்தான்.
பிரேசில் நாட்டு நடிகையுடன் காதலா?
சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அவரது சாதனைகளை முறியடிக்கும் வல்லமை கொண்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அவரை செல்லமாக எல்லோரும் கிங் என்றே அழைக்கின்றனர். ஒருநாள் ஆட்டம், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இவர் செய்யாத சாதனைகளே இல்லை. சமீபத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்தது. இந்நிலையில், விராட் கோலி குறித்து இணையத்தில் தேடும் போது பிரபல நடிகையின் பெயரும் சேர்ந்து வந்ததால் அவரது ரசிகர்கள் யார் அந்த பெண் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் அவர் ஒரு நடிகை என்பதும் தெரியவந்துள்ளது.
இசபெல் லீடின் என்பவருடன் டேட்டிங்
பிரேசில் நாட்டில் மாடலிங் உலகில் பிரபலமானவர் இசபெல் லீடின். இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்வதற்கு முன்பு பிரேசில் இசபெல்லுடன் 2 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக வெளிநாடுகளில் சுற்றி திரிந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களில் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படமும் இடம்பிடித்திருக்கிறது. இசபெல் லீட் விஜய் தேவரகொண்டா நடித்த வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர், இந்தியில் அமீர்கானுடன் தலாஷ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
மனம் திறந்த இசபெல்
விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு வாமிகா என்ற மகளும் அகாய் என்ற மகனும் உள்ளனர். இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவரது வெற்றி தோல்விகளில் உறுதுணையாக இருக்கும் அனுஷ்கா சர்மாவை விராட் கோலியில் ரசிகர்கள் அதிக அன்பு கொண்டுள்ளனர். இந்த சூழலில் இசபெல் லீடின் புகைப்படம் எதற்காக வைரலாகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மாடலிங் துறையில் சிறந்து விளங்கும் இசபெல் லீட் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது விராட் கோலி குறித்த கேள்விக்கு, நானும் விராட் கோலியும் 2 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்தோம். அதை யாரிடம் வெளிப்படையாக தெரிவிக்க விருப்பம் இல்லை. அது கடந்த காலத்தை பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.





















