Chess Olympiad: 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு... செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் 3வது இந்திய அணி அறிவிப்பு
மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் 3வது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கின்றது. ரஷ்யாவில் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகளை உக்ரைன் மீதான போர் காரணமாக அங்கு நடத்தப்படமாட்டது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்யாட் 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடத்த வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற இருக்கிறது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்து வருகிறது.
HERE IT IS 🤩🔥
— All India Chess Federation (@aicfchess) July 3, 2022
India will field it's 3️⃣rd team in Open section for the 44th #ChessOlympiad scheduled to begin from July 28 🙌
GM #TejasBakre will be the Coach & Captain of this 🇮🇳 team. Take a look ⬇️#OlympiadFlame | #India4ChessOlympiad | #ChessChennai2022 | @FIDE_chess pic.twitter.com/mlYV3Nzg43
இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்