மார்ச் 2026-ல் ஸ்கோடா கார்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
Skoda Car Discount Mar 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மார்ச் மாதத்தில் தனது கார் மாடல்கள் மீது ரூ.5 லட்சம் வரை ஸ்கோடா நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது.

Skoda Car Discount Mar 2026: மார்ச் மாதத்தில் ஸ்கோடா நிறுவனத்தின் எந்தெந்த கார் மாடலுக்கு, எவ்வளவு சலுகை அளிக்கப்பட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் வரை சலுகைகள் - ஸ்கோடா அதிரடி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் உள்ள தனது கார் மாடல்கள் மீது, ஸ்கோடா நிறுவனம் மார்ச் மாதத்தில் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. 70 ஆயிரம் ரூபாய் தொடங்கி 5 லட்சம் வரை இந்த பலன்கள் நீடிக்கிறது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள என்ட்ரி லெவல் கார் தொடங்கி முதன்மையான கார் மாடல் வரையிலும் இந்த ஆஃபர் பொருந்தும். எனவே எந்தெந்த கார் மாடல்கள் மீது எவ்வளவு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பணத்தள்ளுபடி மட்டும் எவ்வளவு? என்பது போன்ற பல சலுகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஸ்கோடா எந்த காருக்கு எவ்வளவு சலுகை?
1. ஸ்கோடா கைலாக்
ஸ்கோடாவின் காம்பேக்ட் எஸ்யுவி ஆன கைலாக்கில் 2026ம் ஆண்டு உற்பத்தி யூனிட்கள் குறைந்தபட்ச சலுகைகளை பெறுகின்றன. அதன்படி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்ரேட் டிஸ்கவுண்ட் என தலா 10 ஆயிரம் ரூபாய் சலுகைகளை பெற முடியும். அதேநேரம், 2025ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைலாக் யூனிட்களை நீங்கள் தேர்வு செய்தால், ஒட்டுமொத்தமாக அதிகபட்சமாக 70 ஆயிரம் ரூபாய் வரையிலான பலன்களை பெற முடியும். இது தேர்வு செய்யும் வேரியண்ட்கள் மற்றும் டீலர்கள் வசமுள்ள கையிருப்பை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஸ்கோடா ஸ்லாவியா
செடான் காரை விரும்புவோருக்கு ஏதுவாக, ஸ்கோடாவின் ஸ்லாவியாவும் அதிரடியான சலுகைகளை பெற்றுள்ளது. 2026ம் ஆண்டில் உற்பத்தி செய்த யூனிட்களை தேர்வு செய்வோருக்கு, 25 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் கார்ப்ரேட் போனஸ் வழங்கப்படும். 2025ம் ஆண்டு உற்பத்தி ஸ்லாவியா யூனிட்கள் மீது அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை பயனர்கள் சேமிக்கலாம்.

3. ஸ்கோடா குஷக்
ஸ்கோடாவின் மாடல்களிலேயே குஷக் மாடலானது மிகவும் கவனிக்கத்தக்க சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெற்றுள்ளது. அதன்படி நடப்பாண்டு உற்பத்தி யூனிட்களை தேர்வு செய்வோருக்கு, 20 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடி, 50 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் லாயல்டி ரிவார்ட் வழங்கப்படுகிறது. அதேநேரம், 2025ம் ஆண்டு யூனிட்களை தேர்வு செய்வோர் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணப் பலனை பெற முடியும்.

4. ஸ்கோடா கோடியாக்
ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் சற்றே மேலே சென்றால், தள்ளுபடி சலுகைகளை பெறும் பட்டியலில் கோடியாக் மாடலும் உள்ளது. நடப்பாண்டில் உற்பத்தி செய்த யூனிட்களை தேர்வு செய்தால், 50 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் லாயல்டி பலனை பெற முடியும். அதேநேரம், கடந்த 2025ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடலை தேர்வு செய்தால், கையிருப்பு அடிப்படையில் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பயனர்கள் சேமிக்கலாம்.

ஸ்கோடா கார்களுக்கான தள்ளுபடி விவரங்கள்:
| கார் மாடல் | 2026 உற்பத்தி மாடல் | 2025 உற்பத்தி மாடல் |
| ஸ்கோடா கைலாக் | ரூ.20,000 | ரூ.70 ஆயிரம் வரை |
| ஸ்கோடா ஸ்லாவியா | ரூ.50,000 | ரூ.1.5 லட்சம் வரை |
| ஸ்கோடா குஷக் | ரூ.1.2 லட்சம் | ரூ.2 லட்சம் வரை |
| ஸ்கோடா கோடியாக் | ரூ.1 லட்சம் | ரூ.5 லட்சம் வரை |
யாருக்கு லாயல்டி சலுகை?
ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் கார்களை அதாவது ஃபோக்ஸ்வாகன், ஆடி மற்றும் போர்ஷே போன்ற கார்களை கொண்டிருக்கும் நபர்களுக்கு லாயல்டி சலுகை பொருந்தும். தகுதியான நபர்கள் புதிய ஸ்கோடா காரை வாங்கும்போது இந்த பலனை பயன்படுத்தி கொள்ளலாம். லாயல்டி ரிவார்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகிய இரண்டையும் பயனரால் பெற முடியாது, ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேற்குறிப்பிடப்பட்ட சலுகைகள் அனைத்தும் மார்ச் 2026-க்கு மட்டுமே பொருந்தும்.
Frequently Asked Questions
மார்ச் 2026-ல் ஸ்கோடா கார்களுக்கு எவ்வளவு வரை சலுகைகள் உள்ளன?
ஸ்கோடா கைலாக் மாடலுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?
2025 உற்பத்தி செய்யப்பட்ட கைலாக்கிற்கு அதிகபட்சம் 70 ஆயிரம் ரூபாய் வரை சலுகை உண்டு. 2026 யூனிட்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சலுகை உள்ளது.
ஸ்கோடா ஸ்லாவியா மாடலுக்கு என்ன சலுகைகள் உள்ளன?
2025 உற்பத்தி ஸ்லாவியா மாடலுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். 2026 யூனிட்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சலுகை உண்டு.
ஸ்கோடா குஷக் மற்றும் கோடியாக் கார்களுக்கு என்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன?
குஷக் காருக்கு 2025 யூனிட்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை சலுகை உள்ளது. கோடியாக் காருக்கு 2025 யூனிட்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சலுகை கிடைக்கும்.
லாயல்டி சலுகை யாருக்கு பொருந்தும்?
ஃபோக்ஸ்வாகன் குழும கார்களை (ஃபோக்ஸ்வாகன், ஆடி, போர்ஷே) வைத்திருப்பவர்களுக்கு லாயல்டி சலுகை பொருந்தும். இதில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது லாயல்டி ரிவார்ட் இரண்டில் ஒன்றையே தேர்வு செய்ய முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்























