IND vs NZ Head to Head: நேருக்கு நேர் மோதலில் இந்தியா 'கெத்து'.. உலகக்கோப்பையில் நியூசிலாந்து 'மாஸ்'.. அகமதாபாத்தில் கோப்பை யாருக்கு?
IND vs NZ Head to Head in T20 World Cup:2022 முதல், இந்தியாவும் நியூசிலாந்தும் டி20 போட்டிகளில் 10 முறை மோதியுள்ளன, நியூசிலாந்து அணி இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நிலையில் இதுவரை இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனை என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்
நேருக்கு நேர் போட்டியில் யார் முன்னிலை
இரு அணிகளுக்கு இடைட் நேருக்கு நேர் போட்டிகளின் புள்ளிவிவரங்களை எடுத்து பார்க்கும் போது. இரு அணிகளும் இதுவரை 30 முறை சந்தித்துள்ளன, அதில் இந்தியா 18 முறையும் இந்தியாவும், நியூசிலாந்து 11 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது. 2022 முதல், இந்தியாவும் நியூசிலாந்தும் டி20 போட்டிகளில் 10 முறை மோதியுள்ளன, நியூசிலாந்து அணி இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது. நேருக்கு நேர் போட்டிகளின் சாதனையில் இந்தியா தெளிவாக முன்னிலை வகிக்கிறது.
இறுதிப் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 2023 ஆம் ஆண்டு நடந்த அந்தப் போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பைகளில் நியூசிலாந்து ஆதிக்கம்
டி20 உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதும் போட்டிகளைப் பொறுத்தவரை, நியூசிலாந்து அணி இந்திய அணியை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை, இந்தியாவும் நியூசிலாந்தும் டி20 உலகக் கோப்பையில் மூன்று முறை மோதியுள்ளன, நியூசிலாந்து அணி மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தின் இந்த மூன்று வெற்றிகளும் 2007, 2016 மற்றும் 2021 உலகக் கோப்பைகளில் கிடைத்தன.
2023 உலகக்கோப்பை தேஜாவூ
2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை இதே மைதானத்தில் வீழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் மிக முக்கியமானதாக இருக்கும், இந்த மைதானத்தில் சேசிங் என்பது மிகவும் கடினமான பணியாக இருக்கலாம். இங்கு விளையாடிய 14 டி20 சர்வதேச போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி ஒன்பது முறை வென்றுள்ளது.
இந்தியா இதுவரை நியூசிலாந்திற்கு எதிரான எந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















