IND vs NZ T20 WC Final: ”Warden-னா அடிப்போம்..” இந்தியாவை கதறவிடும் கருப்பு தொப்பிகள்.. உலகக் கோப்பையில் வெற்றியே கிடையாதாம்
IND vs NZ T20 World Cup 2026 Final: இரண்டு போட்டிகளில் இந்தியா அபாரமான ஃபார்மில் இருந்தாலும், நியூசிலாந்து அணியுடனான பழைய புள்ளிவிவரங்கள் ரசிகர்களிடையே ஒரு பதற்றத்தை உருவாக்கியுள்ளன

2026 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நெருங்கி வரும் வேளையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் அச்சம் நிலவி வருகிறது, அதுதான் "கிவி சாபம்" (The Kiwi Curse). இரண்டு தசாப்தங்களாக உலக கிரிக்கெட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்திய அணிக்கு, டி20 உலகக் கோப்பை என்று வந்துவிட்டால் நியூசிலாந்து அணி ஒரு தீர்க்க முடியாத தலைவலியாக இருந்து வருகிறது.
கிவி சாபம்" என்றால் என்ன?
இருதரப்பு தொடர்களில் நியூசிலாந்தை துவம்சம் செய்யும் இந்திய அணி, டி20 உலகக் கோப்பை என்று வரும்போது மட்டும் அவர்களிடம் தோற்பதையே ரசிகர்கள் "கிவி சாபம்" என்கிறார்கள். இந்தியாவின் அசுர பலத்திற்கு சவால் விடும் ஒரு "கிரிப்டோனைட்" போல பிளாக் கேப்ஸ் அணி செயல்படுகிறது. மிக முக்கியமான தருணங்களில் இந்தியாவின் பலவீனங்களைக் கண்டறிந்து, அவர்களை வீழ்த்துவதில் நியூசிலாந்து கில்லாடியாக உள்ளது.
0-3 என தடுமாறும் இந்தியா:
2007 (ஜோகன்னஸ்பர்க்):
முதலாவது டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருந்தாலும், அந்தத் தொடரில் இந்தியாவை வீழ்த்திய ஒரே அணி நியூசிலாந்துதான். 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, 76/0 என வலுவாக இருந்தது. ஆனால் டேனியல் வெட்டோரியின் சுழலில் சிக்கி, 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுத்தது.
2016 (நாக்பூர்): சொந்த ஊரில் மரண அடி:
இந்தியாவின் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், நியூசிலாந்து நம்மையே சுருட்டியது. சாண்ட்னர் மற்றும் இஷ் சோதியின் சுழலில் சிக்கிய இந்தியா, வெறும் 79 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இது உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும்.
2021 (துபாய்): நாக் அவுட் பஞ்ச்
துபாயில் நடந்த 2021 ஆம் உலகக்கோப்பையின் அரையிறுதிக்குச் செல்ல வெற்றி கட்டாயம் என்ற நிலையில், டிரென்ட் போல்ட்டின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா திணறியது. 110 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியாவை, நியூசிலாந்து அணி மிக எளிதாக வீழ்த்தி, இந்தியாவைத் தொடரிலிருந்தே வெளியேற்றியது.
வரலாறு மாறுமா?
தற்போது 0-3 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்தியா, 2026 இறுதிப்போட்டியில் அதே நியூசிலாந்தைச் சந்திக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளில் இந்தியா அபாரமான ஃபார்மில் இருந்தாலும், இந்த பழைய புள்ளிவிவரங்கள் ரசிகர்களிடையே ஒரு பதற்றத்தை உருவாக்கியுள்ளன
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















