மேலும் அறிய

இந்தியா-இங்கி., 5வது டெஸ்ட் ரத்து: இரு அணிகளும் இணைந்து ஒருமித்த முடிவு! காரணம் இது தான்!

போட்டி ரத்தானதை ஐசிசி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதானங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று அந்த நாட்டின் ஓல்ட் ட்ராபோர்டில் நடைபெற இருந்தது. 

இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் லண்டனிலே தனிமைப்படுத்தப்பட்டார். இந்த சூழலில், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல், மற்றொரு பயிற்சியாளர் யோகேஷ் பர்மர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து, இந்திய அணி வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்ப ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆர்.டி. – பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இந்தியா-இங்கி., 5வது டெஸ்ட் ரத்து: இரு அணிகளும் இணைந்து ஒருமித்த முடிவு! காரணம் இது தான்!

முன்னதாக, இந்திய பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணியை விலகிக்கொள்ளுமாறு இங்கிலாந்து வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் இந்திய அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா முடிவுகள் நெகட்டிவ் என வந்ததால், போட்டி தொடங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்பட்டது.

இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி இன்றைய 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வரவில்லை என்றாலும், அங்கு வர்ணனையாளராக சென்றுள்ள தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தனது ட்விட்டர் பக்கத்தில் இன்றைய போட்டி குறித்து சற்று முன் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் இன்றைய போட்டி துவங்க வாய்ப்பில்லை என கூறியிருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் இன்றைய போட்டி இல்லை என உறுதியான பதிவையும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு மேலுமு் ஒரு சோதனை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அந்த சோதனை நிறைவு பெற்ற பின் போட்டியை துவக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள் மட்டுமே போட்டி ஒத்தி வைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ... இன்றைய போட்டி ரத்தாவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. 

இந்நிலையில், போட்டி ரத்து செய்ததை ஐசிசி.,யை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகள் இணைந்து இந்த முடிவை எட்டியுள்ளதாக ஐசிசி.,யை தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அந்த தகவலை உறுதி செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Flashback: எழுதியது வானத்தைப் போல... எடுத்தது சூர்யவம்சம்... ஜனகராஜ் கேட்டு சரத்குமார் நடித்த சூர்யவம்சம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget