WTC 2021 | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸுக்குப் பின்னால் இருக்கும் கதை தெரியுமா?
ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ் வடிவம் உருவான கதை தொடர்பாக ஒரு பதிவை செய்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்த இறுதிப்போட்டிக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகையும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ் ஆகியவை தரப்படும். இந்தச் சூழலில் அந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ் வடிவம் தொடர்பாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது.
அதில், "ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ் உருவாக தூண்டுகோளாக இருந்தது ஒரு சிறப்பான வெற்றிக்கு பிறகு வீரர்கள் ஸ்டெம்பை நினைவு சின்னமாக எடுத்து கொண்டு வருவார்கள். அத்துடன் அந்த ஸ்டெம்பை ஆகாயத்தை நோக்கி மகிழ்ச்சியில் அசைப்பார்கள். அவர்கள் அந்த செய்கை பார்த்தவுடன் எங்களுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கோப்பைக்கு பதிலாக ஒரு மேஸ் செய்யலாம் என்ற யோசனை வந்தது. எனவே தான் நாங்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸை வடிவமைத்தோம்" எனத் தெரிவித்துள்ளது.
Ever wondered what the inspiration behind the Test Championship mace was? 🤔
— ICC (@ICC) June 17, 2021
Here's the story! #WTC21 pic.twitter.com/V0EHfgsPZC
மேலும் இந்த இறுதிப் போட்டி தொடர்பாக முன்னோட்டம் குறித்த வீடியோ ஒன்றையும் ஐசிசி பதிவிட்டுள்ளது. அத்துடன் இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்து தொடர்பாகவும் ஒரு பதிவை செய்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு தேவையான முக்கியமான குணங்கள் குறித்தும் ஒரு பதிவை செய்துள்ளது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உள்ளிட்டோர் அது குறித்து உரையாற்றுகின்றனர். அந்தப் பதிவில் உடற் தகுதி, மன உறுதி, கவனம் மற்றும் அணியாக செயல்பாடும் தன்மை ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
🔹 Physical abilities
— ICC (@ICC) June 17, 2021
🔹 Mental abilities
🔹 Concentration
🔹 Teamwork
Legends highlight the qualities of Test cricket ahead of the #WTC21 Final between India and New Zealand 📽️ pic.twitter.com/QhAbizLc9e
🤩
— ICC (@ICC) June 17, 2021
The shiny red ball for the #WTC21 Final looks 👌 pic.twitter.com/P5LaYmfdGO
The #WTC21 Final India squad with head coach @RaviShastriOfc 📸
— ICC (@ICC) June 17, 2021
Which of these players do you think will feature in the playing XI? 🇮🇳 pic.twitter.com/GIIoj8adeR
இவ்வாறு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பாக தொடர்ந்து சில பதிவுகளை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: WTC Final : நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : சவுத்தாம்ப்டன் மைதானம் எப்படி ?