"வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும்..."- 40 வயது ஃபிட் தல தோனி வைரல் படம் !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புதிய படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தன்னுடைய 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது இவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் அதிகளவில் வெளியே வருவதில்லை. இதனால் இவரை காண முடியாமல் அவரது ரசிகர்கள் மிகவும் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் தன்னுடயை 40ஆவது பிறந்தநாளுக்கு பிறகு முதல் முறையாக தோனியின் படம் ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தோனி மும்பையில் நடைபெற்ற பாடகர் ராகுல் வைத்யா மற்றும் நடிகை திஷா பர்மார் ஆகியோரின் திருமணத்திற்கு சென்றுள்ளார். இதற்காக அவர் விமான பயணம் மேற்கொண்ட போது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பார்த்ததைவிட மிகவும் ஸ்லிம் ஆகி ஃபிட் ஆக இருக்கிறார். ஒரு பிளாக் டி-சர்ட் மற்றும் பெண்ட் அணிந்து தோனி அந்தப் படத்தில் உள்ளார். 40 வயதிலும் ஃபிட் ஆக இருக்கும் தல தோனியின் படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் குஷியாகி விட்டனர். இந்தப் படத்தை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் தோனிக்கு சரியாக அமையவில்லை. அதில் மொத்தமாக 37 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். குறிப்பாக 18 ரன்கள் தான் அவர் ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இதனால் இரண்டாவது பாதியில் மீண்டும் பழைய தோனியை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதற்கு ஏதுவாக தோனி தன்னுடைய உடல் எடையை குறைத்து தயாராகி வருவது போல் தெரிகிறது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் தோனியின் பேட்டிங் சரியாக எடுபடவில்லை. அந்தத் தொடரில் வெறும் 200 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றம் அளித்தது.
Ms dhoni stuns everyone with his weightloss. 💪 pic.twitter.com/eNDSKdbFV7
— Ajith10 (@Ajith_1024) July 17, 2021
ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Dhoni's Swag standing 😎❤️@MSDhoni • #MSDhoni • #WhistlePodu pic.twitter.com/BCheyPXajW
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) July 15, 2021
மேலும் படிக்க: டி-20 உலகக்கோப்பை குழுக்கள் அறிவிப்பு... க்ரூப் ‘2’-ல் இந்திய அணி!