Fans Ask Pat Cummins: ஒரு பந்தில் 6 ரன் - தோனிக்கு எந்த பந்து வீசுவீங்க ? :- பேட் கம்மின்ஸ் சுவாரசியம்!
தோனி கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்கும் வீடியோக்களை பலமுறை நான் மில்லியன் முறை பார்த்துள்ளேன், அவருக்கு இறுதி கட்டங்களில் பந்து வீசுவது மிகவும் கடுமையானது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் அண்மையில் தனது ரசிகர்களுடன் யூடியூப் சமூக வலைத்தளத்தில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ஒரு சுவாரசியமான கேள்வியை பேட் கம்மின்ஸிடம் முன்வைத்தார். அதாவது ஒரு பந்தில் 6 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் நீங்கள் தோனிக்கு பந்து வீசினால் என்ன பந்து வீசுவீர்கள் என்பதுதான் அது.
இதற்கு பதிலளித்த பேட் கம்மின்ஸ், தோனி கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்கும் வீடியோக்களை பலமுறை தான் பார்த்துள்ளதாக தெரிவித்தார். அவருக்கு இறுதி கட்டங்களில் பந்து வீசுவது கடுமையான காரியம் என்றும் தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனி இன்றும் உலகிலேயே கிரிக்கெட் பந்துகளை அதிக பலத்துடன் அடித்து சிக்சர் விரட்டும் வீரராக திகழ்கிறார். அவர் ஒரு பெஸ்ட் பினிஷர் என்பதையும் தாண்டி, பலமுறை இக்கட்டான சூழலில் பதற்றமின்றி தோனி இறுதி பந்தை சிக்சர் அடிக்கும் வழக்கத்தை ரசிகர்கள் கண்டுள்ளனர்.
இந்நிலையில் கொல்கத்தா அணி வீரரும், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் தோனிக்கு வீசவேண்டிய சரியான இறுதி பந்தை தீர்மானிப்பது மிக கடினமானது என ஒப்புக்கொண்டுள்ளார். பேட் கம்மின்ஸ் இது குறித்து தெரிவிக்கையில் "தோனிக்கு இறுதி பந்து வீசுவது மிகவும் கடினமானது, ஏனென்றால் யார்க்கர் பந்துகளை கூட சிக்சருக்கு விளாச கூடியவர் தோனி. ஆனால் ஒரு வேலை இறுதி பந்தை வீச வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டால், யார்க்கர் பந்தை வீச மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸ் இந்த பதில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் இறுதி கட்டங்களில் பவுலர்கள் பலரின் தேர்வாக எப்போதுமே யார்கர் பந்து தான் இருக்கும். ஆனால் அதையும் தன் ஹெலிகாப்டர் ஷாட் மூலியம் எங்கே தோனி அடித்து விடுவார் என்பதினாலோ என்னமோ பேட் கம்மின்ஸ் அந்த பந்தை தேர்வு செய்யவில்லை. அதற்கு ஒரு காரணத்தையும் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார், அதாவது "பல நேரங்களில் பவுலர்கள் யார்க்கர் வீச முயற்ச்சி செய்து, அதை மிஸ் செய்யும் போது, தோனி அதை சிக்ஸர் விளாசும் வீடியோக்களை நான் மில்லியன் முறை பார்த்துள்ளேன், அதனால் நான் யார்க்கர் வீசாமல், பவுன்சர் அல்லது slower பால் அல்லது வைட் யார்க்கர் வீசுவேன். ஆனால் அந்த நிலையில் நான் இல்லாமல் இருக்கவே விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தோனி ராஞ்சியில் உள்ள தனது பார்ம் ஹவுசில் தனது குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார்.