செசபிள் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தா..! பட்டம் வென்ற சீன வீரர்..!
செசபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இறுதிப்போட்டியில் சீன வீரர் டிங் லிரேனுடன் போராடி பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
இந்தியாவின் இளம் செஸ் ஜாம்பவனாக பிரக்ஞானந்தா திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் பங்கேற்று ஆடி வந்தார். கொரோனா காரணமாக இந்த போட்டித்தொடர் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் தலைசிறந்த கார்ல்சனை தோற்கடித்த பிரக்ஞானந்தா அரையிறுதியில் நெதர்லாந்தின் அனிஸ் கிரியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Congratulations to Ding Liren on winning the #ChessableMasters, his first triumph on the @Meltwater Champions Chess Tour, after winning a final game thriller! https://t.co/CWw3ThEQjq #ChessChamps pic.twitter.com/mkiE6WtrQL
— chess24.com (@chess24com) May 26, 2022
இந்த நிலையில், இரண்டு சுற்றாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் 2ம் நிலை வீரரான செஸ் ஜாம்பவானாகிய சீனாவைச் சேர்ந்த டிங் லிரேனுடன் மோதினர். நேற்று முன்தினம் காலையில் தனது 11ம் வகுப்புத் தேர்வை முடித்துவிட்டு டிங் லிரேனுடன் மோதினர். முதல் ஆட்டத்தில் டிங் லிரேனுடன் வெற்றியை பறிகொடுத்த பிரக்ஞானந்தா இரண்டாவது ஆட்டத்தை வென்று சமன்செய்தார். மூன்றாவது ஆட்டத்தை மீண்டும் டிங்லிரேன்வென்றார். நான்காவது ஆட்டத்தை பிரக்ஞானந்தா சமன்செய்ததால் முதல் சுற்றில் டிங் லிரேன் 2.51.5 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றார்.
16-year-old Indian prodigy @rpragchess lost out in the final game, but played a brilliant event! https://t.co/CWw3ThEQjq #ChessChamps #ChessableMasters pic.twitter.com/fMJaINpIFu
— chess24.com (@chess24com) May 26, 2022
இதையடுத்து, நேற்று இரவில் பிரக்ஞானந்தா மீண்டும் டிங் லிரேனுடன் மோதினர். இரண்டாம் சுற்றின் முக்கிய ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதால் ஆட்டம் டை பிரேக்கருக்கு சென்றது. டை பிரேக்கரில் டிங் லிரேன் பிரக்ஞானந்தாவை வீழ்த்தியதால் அவர் செசபிள் மாஸ்டர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டிங் லிரேனுடன் தோல்வியை சந்தித்தாலும், அவருக்கு கடுமையான நெருக்கடி அளித்த பிரக்ஞானந்தாவிற்கு செஸ் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெற்றி பெற்ற டிங் லிரேனுக்கு பரிசுத்தொகையாக 25 ஆயிரம் டாலரும், போனசாக 6 ஆயிரத்து 250 டாலரும், இரண்டாவது பரிசு பெற்ற பிரக்ஞானந்தாவிற்கு 15 ஆயிரம் டாலரும், 6 ஆயிரத்து 250 டாலரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்