அதிரடியாய் செயல்பட்ட தவான் மற்றும் பிரித்வி சென்னையை வீழ்த்திய டெல்லி
ஐபிஎல் 2021ன் இரண்டாவது போட்டி மும்பை வான்கேடா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
ஐபிஎல் 2021ன் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணிக்கும் மும்பை அணிக்கும் எதிராக நடந்தது. மேலும் அந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றியை பெற்றது. இந்நிலையில் ஐபிஎல் 2021ன் இரண்டாவது போட்டி மும்பை வான்கேடா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற டில்லி கேப்டன் ரிஷபந்த், பந்து வீச்சை தேர்வு செய்தார். உற்சாகத்துடன் களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் விக்கெட் இழந்தாலும், மெயின் அலி, ரெய்னா, ராயுடு, ஜடேஜா, சாம் கரன் பங்களிப்பில் நல்ல ஸ்கோர் பெற்றது. துவக்க வீரர் டு பிளசிஸ்மற்றும் கேப்டன் தோனி ‛டக்’ அவுட் ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது, இறுதியில் 189 அடித்தால் வெற்றி என்ற சற்று கடிமான இலக்கையே டெல்லிக்கு அளித்தது சென்னை.
களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் நின்று நிதானமாக ஆடாமல் அடித்து அதிரடியாக ஆடி ஓவருக்கு 10 ரங்களுக்கு குறையாமல் எடுத்தனர். முதலில் பிரித்வி ஷா அவரை தொடர்ந்து ஷிகர் தவான் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியியல் டெல்லி அணி மூன்று விக்கெட்களை மட்டுமே இழந்து சென்னை அணியை வெற்றிகொண்டது.