Sanjeev Goenka : ”ஒரு வார்த்தை கூட பேசல! இனியும் பேச மாட்டாரு” தோனி குறித்து மனம் திறந்த கோயங்கா..
Sanjeev Goenka :லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனக்கு எம்.எஸ் தோனிக்கும் உடனான உறவு பிணைப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்
ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியில் இருந்து தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசியுள்ளார்.
ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்:
2016-2017 ஆம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு சீசன்களுக்கு இரண்டு புதிய அணிகளாக ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் இணைந்தன.
இதையும் படிங்க: Paddy Upton : யாரு சாமி நீங்க! கிரிக்கெட் முதல் செஸ் வரை.. இந்தியாவை தலை நிமிர் செய்த தென்னாப்பிரிக்கர்.. யார் இந்த பேடி அப்டன்?
தோனி நீக்கம்:
இந்த சீசனில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார், இந்த சீசனில் புனே மிக மோசமாக விளையாடியது, மொத்தம் 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தை பிடித்தது. இதனால் அந்த சீசனுக்கு பிறகு புனே அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் தோனி ரசிகர்கள் கோயங்காவை வறுத்தெடுத்தனர், குறிப்பாக தோனியின் மனைவி சாக்ஷி கூட கோயாங்காவை தாக்கி பேசியிருந்தார்.
தோனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை:
தோனியை கேப்டன்சி பதவியிலிருந்து நீக்கினது பற்றி சஞ்சீவ் கோயங்கா தற்போது பேசியுள்ளார். இது குறித்து பேசுகையில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தோனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தனக்கும் தோனிக்கும் இன்னும் நல்ல உறவு இருப்பதாக கோயங்கா வலியுறுத்தினார், கேப்டன்ஷிப் விவகாரம் ஒருபோதும் பிரச்சினை இல்லை என்றும் கூறினார்.
Sanjiv Goenka said "Dhoni has not spoken a word & will not - it's a communication that was between two individuals - what is important is that this relationship is still very good". [TRS - Talking about RPS Captaincy in 2017] pic.twitter.com/v91jz2QwBj
— Johns. (@CricCrazyJohns) December 12, 2024
” மேலும் அவர் ஒரு வார்த்தை கூட வெளியில் பேசவில்லை , இனியும் அவர் பேசமாட்டார். அது ஒரு தனிப்பட்ட விஷயமாகும்,. இது இரண்டு நபர்களுக்கு இடையேயான நடந்த உரையாடல் அது, இரண்டு நபர்கள் அதை முடிவும் செய்தனர். முக்கியமானது விஷயம் என்னவென்றால், எங்கள் இருவருக்குமான இந்த உறவு இன்னும் நன்றாக இருக்கிறது." என்று கோயங்கா பேசியிருந்தார்.