மேலும் அறிய

Rishabh Pant: "கிரிக்கெட்டில் மீண்டும் அறிமுகமாவதுபோல உணர்கிறேன்" : ரிஷப்பண்ட் நெகிழ்ச்சி!

IPL 2024: 15 மாத இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் ஆட வரும் ரிஷப் பண்ட், மீண்டும் தான் கிரிக்கெட்டில் அறிமுகமாவது போன்ற உணர்வு இருப்பதாக உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப்பண்ட். தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும், பேட்டிங்கில் அதிரடி காட்டும் வீரராகவும் உலா வந்தவர். இவர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ரிஷப்பண்ட் கடந்த ஒன்றே கால் ஆண்டுகாலமாக அதாவது 15 மாதமாக கிரிக்கெட் ஆடாமாலே இருந்து வருகிறார்.

கம்பேக் தரும் ரிஷப்பண்ட்:

இந்த நிலையில், முழு உடல் தகுதியை எட்டிய ரிஷப்பண்ட் வரும் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வரும் ஐ.பி.எல். தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்குள் காலடி எடுத்து வைக்கிறார் ரிஷப்பண்ட். உடற்தகுதி சான்றிதழ் பெற்றுள்ள அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக கம்பேக் தருகிறார்.

அறிமுகமாவது போல உணர்வு:

15 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட்டிற்கு திரும்பும் ரிஷப்பண்ட் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, “நான் மிகவும் உணர்ச்சிகரமாகவும், அதேசமயம் பதற்றமாகவும் இருக்கிறேன். மீண்டும் கிரிக்கெட்டில் அறிமுகமாவது போல உணர்கிறேன். நான் அனுபவித்த அனைத்திற்கும் பிறகு கிரிக்கெட் விளையாடுவது என்பது அதிசயம். எனது அனைத்து நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும், பி.சி.சி.ஐ. மற்றும் என்.சி.ஏ. ஊழியர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தங்களின் அன்பும், ஆதரவும் எனக்கு மகத்தான பலத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், ஐ.பி.எல். தொடருக்கும் திரும்புவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அணி உரிமையாளர்கள், உதவியாளர்கள் முழு ஆதரவுடன் எனக்கு பக்கபலமாக இருந்தனர். அதற்காக நான் ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். எனது டெல்லி அணியுடன் இணைந்து மீண்டும் விளையாடும் நேரத்திற்காக காத்திருக்க முடியவில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய வீரர்:

தனது அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணியிலும், ஐ.பி.எல். தொடரிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழும் 26 வயதே ஆன ரிஷப்பண்ட், 98 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 சதம், 15 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 838 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரரான ரிஷப்பண்ட் 33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 271 ரன்களும், 30 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 5 அரைசதத்துடன் 865 ரன்களும், 66 டி20 போட்டிகளில் ஆடி 3 அரைசதத்துடன் 987 ரன்களும் எடுத்துள்ளார்.

ரிஷப்பண்ட் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்பியிருப்பது அவரது ரசிகர்களுக்கும், டெல்லி ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை அணியில் விராட் கோலிக்கு இடம் இல்லையாமே.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

மேலும் படிக்க:IPL 2024 : ஐபிஎல்லில் முதல் ஹாட்ரிக் யார் எடுத்தது..? இந்த சாதனையை படைத்தவர்கள் எத்தனை பேர்? முழு லிஸ்ட் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget