மேலும் அறிய

IPL 2024 : ஐபிஎல்லில் முதல் ஹாட்ரிக் யார் எடுத்தது..? இந்த சாதனையை படைத்தவர்கள் எத்தனை பேர்? முழு லிஸ்ட் இதோ!

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். 

ஐபிஎல் வரலாற்றில் பல முறை பேட்ஸ்மேன்கள் பல சிக்ஸர்களை அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். இந்த சாதனை பட்டியலில் பந்து வீச்சாளர்களும் சலித்தவர்கள் இல்லை என்று பல முறை நிரூபித்துள்ளனர். அந்தவகையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கியதில் இருந்து இன்று வரை ஏராளமான பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர். எனவே, ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். 

1. முதல் ஹாட்ரிக் - லட்சுமிபதி பாலாஜி: 

லட்சுமிபதி பாலாஜி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது கடந்த 2008ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அந்த போட்டியில் பஞ்சாப் அணி சேஸிங் செய்தது. கடைசி ஓவர் வீசிய பாலாஜி, ர்பான் பதான், பியூஷ் சாவ்லா மற்றும் ஆர்பி சிங் ஆகியோரை வெளியேற்றி ஐபிஎல் வரலாற்றில் முதல் ஹாட்ரிக் சாதனையை பாலாஜி பூர்த்தி செய்தார்.

2. அமித் மிஸ்ரா:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 3 ஹாட்ரிக் விக்கெட்டுகளை அமித் மிஸ்ரா எடுத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடும் போது பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அதேபோல், கடந்த 2011ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது, ​​மீண்டும் பஞ்சாப் அணிக்கு எதிராக 3வது ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தாது. தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது புனே வாரியர்ஸுக்கு எதிராக அவரது கடைசி ஹாட்ரிக் அமைந்தது.

3. மகாயா ந்தினி:

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது கொல்கத்தா அணிக்கு எதிராக மகாயா ந்தினி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒரே சீசனில் மட்டுமே தென்னாப்பிரிக்கா வீரர் ந்தினி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

4. யுவராஜ் சிங்:

யுவராஜ் சிங் 2009ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது 2 ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அவரது முதல் ஹாட்ரிக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராகவும், இரண்டாவது டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராகவும் அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 2 ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

5. ரோஹித் சர்மா:

ரோஹித் சர்மா தனது ஆரம்ப கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் பந்தும் வீசினார். பார்ட் டைம் பவுலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் 2009ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அவர் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி 6 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

6. பிரவீன் குமார்:

கடந்த 2010ம் ஆண்டு பிரவீன் குமார் ஐபிஎல் வாழ்க்கையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அந்த போட்டியில், டேமியன் மார்ட்டின், சுமித் நர்வால், பராஸ் டோக்ரா ஆகியோரை அடுத்தடுத்து 3 பந்துகளில் பிரவீன் குமார் அவுட் செய்தார். 

7. அஜித் சண்டிலா:

அஜித் சண்டிலா, கடந்த 2012ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது, ​​புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை படைத்தார். அவர் ஜெஸ்ஸி ரைடர், சவுரவ் கங்குலி மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரை அவுட் செய்து வெளியேற்றினார். 

8. சுனில் நரைன்:

கடந்த 2013ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்த சுனில் நரைன், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டேவிட் ஹஸ்ஸி, அசார் மஹ்மூத் மற்றும் குர்கீரத் சிங் ஆகியோரை தொடர்ந்து 3 பந்துகளில் பெவிலியனுக்கு அனுப்பி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

9. பிரவீன் தாம்பே:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பிரவீன் தாம்பே, கடந்த 2014ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அன்றைய போட்டியில் மனிஷ் பாண்டே, யூசுப் பதான் மற்றும் ரியான் டென் டெய்ச் ஆகியோரை அவுட் செய்தார். 

10. ஷேன் வாட்சன்:

அதே ஆண்டில் பிரவீன் தாம்பே ஹாட்ரிக் எடுத்த போது, ​​ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஷேன் வாட்சனும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். ஆனால் வித்தியாசம் என்னவென்றால், வாட்சனின் ஹாட்ரிக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வந்தது.

11. அக்சர் படேல்:

அக்சர் படேல், கடந்த 2016ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது ​​குஜராத் லயன்ஸுக்கு எதிராக தினேஷ் கார்த்திக், டுவைன் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி தனது முதல் ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார்.

12. சாமுவேல் பத்ரீ:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய சாமுவேல் பத்ரி, கடந்த 2017ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பார்த்திவ் படேல், மிட்செல் மெக்லெனகன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை வெளியேற்றி தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்தார்.

13. ஆண்ட்ரூ டை:

ஆண்ட்ரூ டை, குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடிய போது, ​​கடந்த 2017ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்களான அங்கித் சர்மா, மனோஜ் திவாரி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை அடுத்தடுத்து 3 பந்துகளில் வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 

14. ஜெய்தேவ் உனத்கட்:

ஜெய்தேவ் உனத்கட் கடந்த 2017ல் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும்போது பிபுல் சர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 

15. சாம் கர்ரன்:

கடந்த 2019ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது, ​​ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா மற்றும் சந்தீப் லமிஷென் ஆகியோரை வெளியேற்றி சாம் கர்ரன் தனது ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார்.

16. ஷ்ரேயாஸ் கோபால்:

கடந்த 2019ம் ஆண்டு விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரை தொடர்ந்து 3 பந்துகளில் அவுட் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஷ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

17. ஹர்ஷல் படேல்:

ஹர்ஷல் படேல், ஆர்சிபிக்காக விளையாடியபோது, ​​2021ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அப்போது அவர் ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோரை வெளியேற்றினார்.

18. யுஸ்வேந்திர சாஹல்:

ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போது, ​​யுஸ்வேந்திர சாஹல் கொல்கத்தா பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோரை தனது சுழலுக்கு பலியாக்கி ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தார். 

19. ரஷித் கான்:

ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் போது கொல்கத்தா அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து சாதனையை ரஷித் கான் படைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget