மேலும் அறிய

Pujara 100th Test: 100வது டெஸ்டில் இன்று களமிறங்கும் ‘சுவர்’ புஜாரா.. இவர் ஏன் டெஸ்டில் லெஜெண்ட் தெரியுமா..?

கடந்த 2010 அக்டோபர் மாதம் இந்திய அணிக்காக அறிமுகமான புஜாரா, 2010 ல் இருந்து கணக்கெடுப்பின்படி, 15,797 பந்துகளை சந்தித்துள்ளார்.

இந்திய அணியின் மார்டன் டே சுவர் என்று அழைக்கப்படும் புஜாரா, இந்திய அணிக்காக இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் களமிறங்குவதன் மூலம் புஜாரா தனது 100வது டெஸ்டில் விளையாட இருக்கிறார். 

புஜாரா சந்தித்த பந்துகள்:

கடந்த 2010 அக்டோபர் மாதம் இந்திய அணிக்காக அறிமுகமான புஜாரா, 2010 ல் இருந்து கணக்கெடுப்பின்படி, 15,797 பந்துகளை சந்தித்துள்ளார். இந்த பட்டியலில் புஜாராவை விட உலகளவில் 4 பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை சந்தித்துள்ளனர். 

ஜோ ரூட் 127 போட்டிகளில் 19082 பந்துகளை எதிர்கொண்டு முதலிடத்திலும், அலஸ்டர் குக் 17,534 பந்துகளை எதிர்கொண்டு இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். தொடர்ந்து, அசார் அலி (16301), ஸ்டீபன் ஸ்மித் (15927) முறையே 3 மற்றும் 4வது இடத்தில் இருக்கின்றனர். 

இந்தியாவுக்காக அதிக சதம்:

குறைந்தபட்சம் 100 இன்னிங்ஸ்களில் பேட் செய்த 25 இந்திய பேட்ஸ்மேன்களில் இருவர் மட்டுமே சதவீத அடிப்படையில் அதிக சதங்கள் அடித்துள்ளனர். அதில், தற்போதைய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (36%) மற்றும் சுனில் கவாஸ்கர் (34.9%) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக புஜாரா 30.6% மூன்றாவது இடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் (29.7%) மற்றும் விராட் கோலி (29.1%) அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். 

ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக பந்துகளை விளையாடிய இந்திய வீரர் புஜாரா:

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை விளையாடிய இந்திய வீரர் புஜாரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற ராஞ்சி டெஸ்டில் 202 ரன்கள் எடுக்க 525 பந்துகளை எதிர்கொண்டார். இதற்கு முன் இந்த சாதனை அவரது முன்னோடியான ராகுல் டிராவிட் பெயரில் சாதனையாக பதிவாகி இருந்தது. டிராவிட் 2004ல் பாகிஸ்தானுக்கு எதிராக 495 பந்துகளை எதிர்கொண்டு 270 ரன்கள் எடுத்திருந்தார். 

கபா டெஸ்ட்: 2021 

பார்டர்-கவாஸ்கர் தொடரின் 2020-21 தொடரின் 4-வது டெஸ்டில் இந்தியாவுக்கு முன் ஆஸ்திரேலியா 328 ரன்கள் சவாலான இலக்கை நிர்ணயித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அவுட் ஆனபோது, ​​​​கில் உடன் இணைந்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் புஜாரா. 

இந்த டெஸ்டில் புஜாரா 211 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்தை உடல் முழுவதும் வாங்கி கொண்டார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. கபா மைதானத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற டெஸ்ட் வெற்றியில் புஜாரா முக்கிய பங்கு வகித்தார்.

Vaathi Review: வாத்திக்கு விசில் போடலாமா? விளாசித் தள்ளலாமா? - ஃபர்ஸ்ட் கிளாஸ் ரிவ்யூ இதோ....!

பார்ம் அவுட் டூ பார்ம் இன்:

பார்ம் அவுட் காரணமாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து புஜாரா நீக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் இருந்து அவரது ஆட்டம் வேறு மாதிரியாக அமைந்தது. 

அந்த ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் 1,094 ரன்கள் குவித்தார். தொடர்ந்து, இந்திய அணிக்கு திரும்பிய புஜாரா இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்டில் விளையாடி அரைசதம் அடித்தார். கடைசியாக, புஜாரா ஜனவரி 2019 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 193 ரன்கள் அடித்திருந்தார். அதன்பிறகு நீண்டலாக சத வறட்சிக்கு  டிசம்பரில் நடந்த வங்கதேச தொடரில் முற்றுப்புள்ளியை வைத்தார். 

தலைப்பு செய்திகள்

IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget