IND vs AUS SCG Test: 46 வருடங்கள்.. ஒரேயொரு வெற்றி.. சிட்னியில் இந்தியாவின் சாதனை! முழு விவரம்
India vs Australia SCG Test: 142 ஆண்டுகள் பழமையான சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி மொத்தம் 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
IND vs AUS SCG Test: ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மைதானத்தில் இந்திய அணியின் சாதனை என்னவென்று பார்ப்போம்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி சாதனை:
142 ஆண்டுகள் பழமையான சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி மொத்தம் 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்த மைதானத்தில் இந்தியா கடைசியாக 46 ஆண்டுகளுக்கு முன்பு 1978ல் வெற்றி பெற்றது. அப்போது பிஷன் சிங் பேடி தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: Gautam Gambhir : ”நேர்மையாக இருக்க வேண்டும்” டிரெஸ்ஸிங் ரூம் சர்ச்சை.. மவுனம் கலைத்த கம்பீர்
இந்த மைதானத்தில் இந்தியா தனது கடைசி மூன்று போட்டிகளையும் டிரா செய்து வருகிறது. இந்த மைதானத்தில் 2021ல் அஜிங்க்யா ரஹானே தலைமையில் இந்தியா கடைசியாக விளையாடியது. அந்த போட்டியில் அஷ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் ஆட்டத்தால், இந்தியா போட்டியை டிரா செய்தது.
கடந்த 25 ஆண்டுகளில் இந்திய அணி சாதனை -
- ஜனவரி 2000: தோல்வி (ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில்)
- ஜனவரி 2004: டிரா
- ஜனவரி 2008: தோல்வி (122 ரன்கள் வித்தியாசத்தில்)
- ஜனவரி 2012: தோல்வி (ஒரு இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில்)
- ஜனவரி 2015: டிரா
- ஜனவரி 2019: டிரா
சிட்னி மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள்:
இந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் அவர் 785 ரன்கள் குவித்துள்ளார். 549 ரன்கள் குவித்த விவிஎஸ் லட்சுமண் இரண்டாவது இடத்திலும் விராட் கோலி 248 ரன்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர்: 785 ரன்கள் (9 இன்னிங்ஸில் 5 போட்டிகள்)
- விவிஎஸ் லட்சுமண்: 549 ரன்கள் (7 இன்னிங்சில் 4 போட்டிகள்)
- சேதேஷ்வர் புஜாரா: 320 ரன்கள் (3 இன்னிங்ஸில் 2 போட்டிகள்)
- ரிஷப் பந்த்: 292 ரன்கள் (2 போட்டிகள், 3 இன்னிங்ஸ்)
- ராகுல் டிராவிட் . : 283 ரன்கள் (8 இன்னிங்ஸில் 4 போட்டிகள்)
- விராட் கோலி: 248 ரன்கள் (5 ஒரு இன்னிங்ஸில் 3 போட்டிகள்)
இதையும் படிங்க: Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
சிட்னியில் வெற்றிகரமான இந்திய பந்துவீச்சாளர்:
பந்து வீச்சாளர்களைப் பற்றி பார்க்கையில், அனில் கும்ப்ளே இந்த மைதானத்தில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 3 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டாவதாக சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னா 2 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் ரவி சாஸ்திரி மற்றும் கபில் தேவ் ஆகியோர் தலா 10 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
தற்போதைய அணியில், ரவீந்திர ஜடேஜா 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
- அனில் கும்ப்ளே - 20 விக்கெட்கள் (3 போட்டிகள்)
- எரபள்ளி பிரசன்னா - 12 விக்கெட்கள் (2 போட்டிகள்)
- ரவி ஷஸ்ரி - 10 விக்கெட்கள் (2 போட்டிகள்)
- கபில்தேவ் - 10 விக்கெட்கள் (3 போட்டிகள்) நந்த்லால்
- யாதவ் - 8 விக்கெட்கள் (1 போட்டி)
- முகமது ஷமி - 8 விக்கெட்கள் (2 போட்டிகள்)