Watch video : ”உன்னை விட வேகமா பந்து வீசுவேன்” கேட்டு வாங்கிய ஸ்டார்க், விக்கெட்டை வீழ்த்திய ராணா
Border Gavaskar Trophy : பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஹர்சித் ராணாவும், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கும் செல்லமாக சண்டையிட்டும் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஹர்சித் ராணாவும், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கும் செல்லமாக சண்டையிட்டும் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெர்த் டெஸ்ட்:
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைப்பெறும் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 150 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் இரு அணியை சேர்ந்த பேட்ஸ்மேன்களும் வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸ்சில் அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
ஹர்ஷித் ராணா vs மிட்சேல் ஸ்டார்க்:
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ்சில் மிட்சேல் ஸ்டார்க் பேட்டிங் செய்து கொண்டிருந்தார், அப்போது 30 ஓவரை ஹர்ஷித் ராணா வீசனார். அப்போது அந்த ஐந்தாவது பந்தை வீசிய அவரின் பந்தை ஸ்டார்க் தடுமாற்றதுடன் விளையாடினார், அப்போது ஸ்டார்க் ஹர்ஷித் ராணாவிடம் பேசிய ஸ்டார்க், நான் உன்னை விட வேகமாக பந்து வீசுவேன், எனக்கு நிறைய நினைவுகள் உள்ளது என்று ஸ்டார்க் கூறினார். இதைக் கேட்ட ஹர்ஷித் ராணா சிரித்துக் கொண்டே அடுத்த பந்தை வீச சென்றார். இருவரும் கடந்த ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளதால், இருவருக்குமான இந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
KKR BOYS AT PERTH. 😄👌
— Johns. (@CricCrazyJohns) November 23, 2024
- IPL banter during Border Gavaskar Trophy. pic.twitter.com/xQGKmEAYyu
தண்ணிக்காட்டிய ஸ்டார்க்:
இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக மிட்செல் ஸ்டார்க் மட்டும் நீண்ட நேரம் ஆடினார். இந்த டெஸ்ட் போட்டியில் 100 பந்துகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீரர் மிட்செல் ஸ்டார்க் தான். அவர் 112 பந்துகளை சந்தித்து 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிலும் குறிப்பாக கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்தது மட்டும் இல்லாமல் 1 மணி நேரம் 29 நிமிடங்கள் இந்திய பவுலர்களுக்கு தலைவலியாக இருந்தனர்.