(Source: Poll of Polls)
Border Gavaskar Trophy: அலாரம் வைக்க ரெடியா.. நாளை தொடங்கும் BGT தொடர்.. நேரலையை எங்கு காணலாம்?
Border Gavaskar Trophy Streaming : பார்டர் கவாஸ்கர் தொடரை எந்தெந்த தளங்களில் நேரடியாக பார்க்கலாம் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்த தொடரை எந்தெந்த தளங்களில் நேரடியாக பார்க்கலாம் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
பெர்த் டெஸ்ட்:
முதல் டெஸ்ட் போட்டியானது உலகத்தின் அதிவேக ஆடுகளமான பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.இரு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது. இந்த தொடரை 4-0 என்கிற கணக்கில் இந்திய அணி வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்யியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.
10 ஆண்டுகள் தவம்:
மறுமுனையில் ஆஸ்திரேலியா அணி கடந்த பத்து ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் தொடரில் வெற்றி பெறவில்லை. கடந்த் காலங்களில் ஆஸ்திரேலியா தான் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. இதனால் இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி நிச்சயம் வென்றாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ளது. இரு அணிகளும் தொடரை வென்றாக வேண்டும் என்கிற நெருக்கடியில் களமிறங்குவதால் நிச்சயம் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
#WATCH | Indian Skipper Jasprit Bumrah and Australian Skipper Pat Cummins pose with the Border-Gavaskar Trophy, for a photograph in Perth, Australia. India's Test Vice-Captain Jasprit Bumrah is stepping in for Rohit Sharma in his absence.
— ANI (@ANI) November 21, 2024
The Border-Gavaskar Trophy begins… pic.twitter.com/nlkdfUfRbq
போட்டியை எங்கு காணாலாம்?
இந்த போட்டியானது பெர்த் ஆப்டஸ் மைதனாத்தில் இந்திய நேரப்படி காலை 07.50 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1ல் ஆங்கில வர்ணனையிலும், ஸ்டார் 3-ல் இந்தி வர்ணனையிலும், தமிழ் வர்ணனையில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 தமிழிலும் காணலாம். மேலும் டிடி ஸ்போர்ட்ஸ் இப்போட்டியை இலவசமாக ஒளிப்பரப்பு செய்கிறது. மேலும் ஹாட் ஸ்டார் செயலியிலும் இந்த போட்டியை சந்தா கட்டி நேரலையாக காணலாம்.
இதையும் படிங்க: IND VS AUS : "என்ன திமிர் இருக்கனும்.." இந்திய வீரர்களை மட்டம் தட்டிய கம்மின்ஸ்.. கிழித்து தொடங்கவிடும் ரசிகர்கள்
இரு அணிகள் விவரம்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்) ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி,ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்