IND VS AUS : "என்ன திமிர் இருக்கனும்.." இந்திய வீரர்களை மட்டம் தட்டிய கம்மின்ஸ்.. கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்
Border Gavaskar Trophy: எனது அணியில் ஒரு இந்திய வீரரை கூட சேர்க்க முடியாது என்று ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.
பெர்த்: எனது அணியில் ஒரு இந்திய வீரரை கூட சேர்க்க முடியாது என்று ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறி இருப்பது இந்திய ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பி உள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் நாளை பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவர் முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா அணியை வழிநடத்த உள்ளார்.
சீண்டிப் பார்க்கும் கம்மின்ஸ்:
இந்த நிலையில் கடந்த ஆண்டுகளாக யாரையும் சீண்டி பார்க்காமல் அமைதி காத்து வந்த ஆஸ்திரேலியா வீரர்கள், பேட் கம்மின்ஸ் வருகைக்கு பிறகு எதிரணி வீரர்களை பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் வம்பிழுக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று ஆஸி வீரர்களான டிராவிஸ் ஹெட், நாதன் லயன், ஸ்காட் போலண்ட், மிட்சேல் மார்ஷ், பேட் கம்மின்ஸ் ஆகியோருடன் பேட்டி ஒன்று நடத்தியது. அதில் இந்திய அணி வீரர் ஒருவரை உங்கள் அணியில் சேர்த்தால் யாரை சேர்ப்பீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த டிராவிஸ் ஹெட், நான் எனது அணியில் ரோகித் சர்மாவை சேர்ப்பேன். அவர் அதிரடியாக விளையாடக்கூடியவர்,பொதுவாகவே எனக்கு அதிரடியாக ஆடக்கூடிய வீரர்களை பிடிக்கும். இந்த கேள்விக்கு பதிலாக விராட் கோலியை சொல்வேன் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் ரோகித் சர்மாவை தான் சேர்ப்பேன் என்று தெரிவித்தார். அடுத்து பேசிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலாண்ட், நான் பும்ராவை எனது அணியில் சேர்ப்பேன், பும்ரா மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அசத்தி வருகிறார். அதனால் அவரை அணியில் தேர்ந்தெடுப்பேன் என்றார்.
அடுத்து பேசிய மிட்சேல் மார்ஷ் எனது அணியில் ரிஷப் பண்ட்டை சேர்ப்பேன், 5வது வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார், அது மட்டும் இல்லாமல் ரிஷப் பண்ட் எனக்கு டெல்லி அணியின் கேப்டனாக இருந்துள்ளார் என மார்ஷ் கூறினார்.
இதையும் படிங்க: ICC Champions Trophy 2025 : ”பாஜக அரசு தான் காரணம்” கொளுத்தி போட்ட அக்தர்.. சாம்பியன்ஸ் டிராபி விவகாரம்
நாதன் லயன் கூறுகையில் எனது அணியில் நிச்சயம் விராட் கோலி இருப்பார். ஸ்மித், லபுசேன், விராட் கோலி அணியில் இருந்தால் பேட்டிங் வரிசை எவ்வளவு வலுவானதாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள் என்று தெரிவித்தார்.
View this post on Instagram
அடுத்து பேசிய பேட் கம்மின்ஸ் எனது அணியில் நான் ஒரு இந்திய வீரரை கூட சேர்க்க மாட்டேன் என்று கூறினார். இந்திய அணி வீரர்களை தேர்வு செய்ய மாட்டேன் என்று பேட் கம்மின்ஸ் கூறியதற்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.