மேலும் அறிய

Ind vs Zim: சிக்கிய ஜிம்பாப்வே பவுலர்கள்! காட்டடி ஆடித்த பேட்ஸ்மேன்கள்.. 257 ரன்கள் இலக்கு

Ind vs Zim: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்ப்ர் 8 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது

டாஸ் வென்ற ஜிம்பாப்வே:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார், இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிங்கு சிங்கிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்

நல்ல தொடக்கம் தந்த சாம்சன்

அரையிறுதிக்கு தகுதிப்பெற வேண்டுமென்றால் இந்தப் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது, அதன் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணி தொடக்கம் சரியில்லை என விமர்சனங்கள் எழுப்பட்டது. அதனை ஓரளவுக்கு இந்த போட்டியில் இந்திய ஓப்பனர்கள் சரிசெய்தனர். அதிரடியாக சிக்சருடன் இந்திய அணியின் ரன்கணக்கை தொடங்கினர் சஞ்சு சாம்சன், மற்றோரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா முதல் 2 ஓவர்களில் சற்று நிதானமாகவே ஆடினார். 

மப்போசோ வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட இந்திய 23 ரன்களை சேர்த்தது, அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

ஃபார்முக்கு வந்த அபிஷேக்: 

3வது வீரராக இஷான் கிஷன் களமிறங்கினார், ஆனால் அபிஷேக் சர்மா தனது பழைய ஃபார்முக்கு திரும்பினார், சிக்சரும், பவுண்டரியுமாக அடிக்க இந்திய அணி பவர்பிளே முடிவில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 80 ரன்களை எடுத்தது. இருவரும் அதிரடியாக ஆட இந்திய அணியின் ஸ்கோரானது சர சரவென எகிறியது.அபிஷேக் சர்மா 26 பந்துகளில் தனது டிஉலகக்கோப்பையில் தனது முதல் அரைசதத்தை அடித்தார்.  38 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷன் சிகந்தர் ராசா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் சூர்யக்குமார் யாதவ் பவுண்டரியுடன் தனது ரன் கணக்கை தொடங்கினார், 

இந்தியா அணி 256

அபிஷேக் சர்மா 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்திய அணியின் ரன்வேகம் குறைந்தபாடில்லை, சூர்யாக்குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்டியா, திலக் வர்மா என அடுத்து வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் காட்டடி அடித்தனர். 7 பவுலர்களை பயன்படுத்தியும் இந்திய அணியை ஜிம்பாவ்வே அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ருத்ரதாண்டவம் ஆடினர். பாண்ட்யா 23 பந்துகளில் 50 ரன்களும், திலக் வர்மா 16 பந்துகளில் 46 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது

 

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
Trump Thank Reliance: ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
Embed widget