CWG 2022: நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்..! தங்கம் வெல்வாரா ஸ்ரீஹரி..?
காமன்வெல்த் போட்டியில் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
![CWG 2022: நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்..! தங்கம் வெல்வாரா ஸ்ரீஹரி..? Commonwealth Games 2022 Srihari Nataraj qualifies for Mens 100m Backstroke Semi Finals CWG 2022: நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்..! தங்கம் வெல்வாரா ஸ்ரீஹரி..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/29/e8b191b8606d3843ea94721851f180541659095320_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் பங்கேற்றார். தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் வரும் 5 வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இதையடுத்து, நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீஹரி அபாரமாக செயல்பட்டார். அவர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஸ்ரீஹரி நடராஜ் அவருக்கான பிரிவில் 3 வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மொத்தம் 8 பேர் கொண்ட இந்த போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜன் 54.68 நொடிகளில் இலக்கை கடந்தார். முதலிடத்தை இங்கிலாந்தின் ப்ராடி பால் வில்லியம்ஸ், இரண்டாவது இடத்தை இங்கிலாந்தின் லூக் கிரீன்பேங் பிடித்தனர்.
𝗜𝗻𝘁𝗼 𝘁𝗵𝗲 𝘀𝗲𝗺𝗶-𝗳𝗶𝗻𝗮𝗹𝘀! 🤩
— Olympic Khel (@OlympicKhel) July 29, 2022
Srihari Nataraj of 🇮🇳 finishes the men's 100m backstroke heats with a timing of 5️⃣4️⃣.6️⃣8️⃣ at the Commonwealth Games 2022! 🏊#Swimming | #B2022 | #IndiaAtB2022 | @srihari3529 pic.twitter.com/iR9ELKKaPj
இந்த நிலையில், இந்த போட்டிக்கான அரையிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 16 பேர் இந்த அரையிறுதி சுற்றில் மோத உள்ளனர். இந்த சுற்றில் வெற்றி பெற்று முதல் 8 இடத்தை பிடிக்கும் நபர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் பீட்டர், இங்கிலாந்தின் ப்ராடி, ஆஸ்திரேலியாவின் ப்ராட்லி, இங்கிலாந்தின் லூக், இந்தியாவின் ஸ்ரீஹரி, நியூசிலாந்தின் ஆண்ட்ரூ, ஆஸ்திரேலியாவின் மிட்செல், கனடாவின் சேவியர், ஸ்காட்லாந்தின் மார்டின், ஸ்காட்லாந்தின் கிரெக், வேல்சின் ஜேஸ் மற்றும் ஷாங், ஜேம்ஸ்ல லியாம் ஒயிட், ஹாரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அரையிறுதியில் வெற்றி பெறும் நபர்களுக்கு நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜனுக்கு மற்ற வீரர்களும், இந்திய ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் மோதக்கூடிய அணிகள் என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க : Commonwealth Games 2022 Day 1 LIVE: பேக்ஸ்ட்ரோக் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)