Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் மோதக்கூடிய அணிகள் என்னென்ன தெரியுமா?
செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. முதல் சுற்றை பொறுத்தவரை ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய A அணி ஜிம்பாம்பே அணியை எதிர்கொள்கிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று நடக்கவுள்ள நிலையில் அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
The board pairings of Round 1⃣ are out! #ChessOlympiad
— Chess.com - India (@chesscom_in) July 29, 2022
⚔️🇮🇳 India 1 vs Zimbabwe 🇿🇼
🇮🇳 Players to play today 👇@viditchess @ArjunErigaisi @GMNarayananSL @GMSasikiran
All the best!👍@chennaichess22 @aicfchess #FIDEChessOlympiad2022 #ChessOlympiad2022 #ChennaiChess2022 pic.twitter.com/Mw8MhrycQ1
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டில் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டு சிறப்பான கலாச்சாரம், சிறப்பான அறிஞர்கள் மற்றும் உலகத்தின் பழமையான மொழியை கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும் செஸ் விளையாட்டிற்கும் பந்தம் உள்ளது. அதன்காரணமாக இந்தியாவின் செஸ் பவர் ஹவுஸாக தமிழ்நாடு விளங்கி வருகிறது" எனத் தெரிவித்தார்.
The board pairings of Round 1⃣ are out! #ChessOlympiad
— Chess.com - India (@chesscom_in) July 29, 2022
⚔️ 🇦🇪 UAE vs India 2 🇮🇳
🇮🇳 Players to play today 👇@DGukesh @NihalSarin @adhibanchess @sadhwani2005
All the best!👍@chennaichess22 @aicfchess #FIDEChessOlympiad2022 #ChessOlympiad2022 #ChennaiChess2022 pic.twitter.com/3ozw7iWw37
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று என்றும், 4 மாதங்களில் இந்த ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம் என்றும் கூறினார். மேலும் இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார்.
The board pairings of Round 1⃣ are out! #ChessOlympiad
— Chess.com - India (@chesscom_in) July 29, 2022
⚔️🇮🇳 India 3 vs South Sudan 🇸🇸
🇮🇳 Players to play today 👇@sethuramanchess @iam_abhijeet @KarthikeyanM64
Abhimanyu Puranik
All the best! 👍@chennaichess22 @aicfchess #ChessOlympiad2022 #ChennaiChess2022 pic.twitter.com/RobUkm1rJ2
இந்நிலையில் இன்று செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. முதல் சுற்றை பொறுத்தவரை ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய A அணி ஜிம்பாம்பே அணியை எதிர்கொள்கிறது. இதேபோல் இந்திய B அணி ஐக்கியஅரபு அமீரகம் அணியையும், C அணி தெற்கு சூடான் அணியையும் எதிர்கொள்கிறது. அதேசமயம் பெண்கள் பிரிவை பொறுத்தவரை இந்திய A அணி தஜிகிஸ்தான் அணியையும், இந்திய B அணி வேல்ஸ் அணியையும், இந்திய C அணி - ஹாங்காங் அணியையும் எதிர்கொள்ள உள்ளன. முதல் சுற்று போட்டிகள் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்