Chess Olympiad 2022 : செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுடன் மோதும் இந்தியா..! வெல்லப்போவது யார்..?
Chess Olympiad 2022 : செஸ் ஒலிம்பியாட்டில் இன்று இந்திய ஏ அணி இந்திய சி அணியுடன் மோதுவதால் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரின் தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. இந்திய அணி சார்பில் 6 அணிகள் பங்கேற்று ஆடி வருகிறது.
இந்த நிலையில், இந்த தொடரிலே முதன்முறையாக இந்திய அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ள உள்ளன. ஓபன் சுற்று போட்டியாக இன்று நடைபெற உள்ள போட்டி ஒன்றில் இந்தியா ஏ அணியும், இந்தியா சி அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்தியா ஏ அணியில் கிராண்ட்மாஸ்டர்களாகிய பெண்டலா ஹரிகிருஷ்ணாவும், விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகைசி, எஸ்.எல். நாராயணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய சி அணியில் கிராண்ட் மாஸ்டர்களாகிய சூர்யா கங்குலி, சேதுராமன், அபிஜித்குப்தா மற்றும் அபிமன்யு பூரணிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க : CWG 2022 Boxing: காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த அமித் பங்கால்
இந்திய ஏ அணி மற்றும் இந்திய சி அணியில் இடம்பெற்றுள்ள அனைவரும் சதுரங்கத்தில் ஜாம்பவான்களாக இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் மட்டும் ரசிகர்கள் உறுதியுடன் உள்ளனர். இந்த தொடரில் இதுவரை இந்தியாவின் சார்பில் களமிறங்கியுள்ள 6 அணியைச் சேர்ந்த வீரர்களும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் 188 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்திய அணியின் பிரம்மாண்ட நட்சத்திரங்களான குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் இந்திய பி அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு போட்டியிலும் பெறும், வெற்றி மற்றும் தோல்விகளை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதும் போட்டிகள் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலே இந்திய ஏ அணி மற்றும் இந்திய சி அணி இன்று மோத உள்ளனர்.
மேலும் படிக்க : Chess Olympiad 2022 : "போர் கண்ட பெண் சிங்கம்..! பயம் அறியாது என்றும்..!" செஸ் ஒலிம்பியாட்டில் அசத்தும் பாலஸ்தீன சிறுமி
மேலும் படிக்க : CWG 2022 Boxing: காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவிற்கு 5-வது பதக்கத்தை உறுதி செய்த ஜெயஸ்மீன் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்