மேலும் அறிய

Chess Olympiad 2022 : "போர் கண்ட பெண் சிங்கம்..! பயம் அறியாது என்றும்..!" செஸ் ஒலிம்பியாட்டில் அசத்தும் பாலஸ்தீன சிறுமி

'கலைந்த முடி, போர் பற்றிய சுவடே இல்லாத க்யூட் முகம், இவர் நடந்து வரும் ஸ்டைல்' என செஸ் ஒலிம்பியாட்டின் செல்லக் குட்டியாக ராண்டா மாறிவிட்டார்.

சென்னை, மாமல்லபுரத்தில் தற்போது செஸ் ஒலிம்பியாட 2022 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர்கள் அசத்தி வரும் நிலையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் மொத்த தொடரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இந்த தொடரில் பங்கேற்றுள்ள முன்னணி ஜாம்பவான் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீரர், வீராங்கனைகள் யார் இது என்று உற்று கவனிக்கும் அளவிற்கும் இந்த 8 வயது பாலஸ்தீன சிறுமி ஆடி வருகிறார். மீடியாக்களின் கேமராக்களை தன் பக்கம் திருப்பி உள்ள அந்த சிறுமி யார்? அவர் செய்தது என்ன? பார்க்கலாம் வாங்க.

பாலஸ்தீன சிறுமி :

இந்த தொடரில் பாலஸ்தீன ஓபன் அணி சார்பாக களமிறங்கி உள்ளவர்தான் ராண்டா செடார். ராண்டாவிற்கு 8 வயதுதான் ஆகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். அங்கு உள்ளூர் அணிகளில் ஆடி வந்தவர், தேசிய அளவில் கடந்த 2 வருடங்களாக அதிகம் கவனிக்கப்பட்டார். தேசிய அளவில் பிரபலமாக இருந்த மகளிர் சாம்பியன்ஷிப் வீராங்கனைகளையும், அவர்களது அணிகளையும் வீழ்த்திவிட்டு ராண்டா டாப் இடத்திற்கு வந்தார். தேசிய அளவில் தொடர்ந்து 1 அல்லது 2 வது இடத்தில் ராண்டா இருந்து வருகிறார்.


Chess Olympiad 2022 :

இந்த நிலையில் சமீபத்தில் அங்கு தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வந்த ராண்டா இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தார். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் வென்றாலும், தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2வது இடத்தை 8 வயது சிறுமி பிடிப்பது எல்லாம் அசாதாரணமான காரியம் ஆகும்.

போர் கண்ட பெண்சிங்கம் : 

உலகப்புகழ்பெற்ற ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் ஜூடித் போல்காரை பார்த்து வளர்ந்தவர் ராண்டா. அவரின் மூவ்களை பார்த்து, பார்த்து அவரை போலவே ஆட தொடங்கி இருக்கிறார். இவரின் மூவ்களில் கூட ஜூடித் போல்காரின் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சின்ன வயதில் இருந்தே செஸ் ஆடி வந்தார். ராண்டா மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் வீடு இருக்கும் ஹெப்ரான் பகுதியும் கடுமையாக போரால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். பல முறை அகதிகள் கேம்பில், பள்ளியில் தூங்கி, உயிரை காப்பாற்றிக்கொண்டு இவர் செஸ் ஆடி இருக்கிறார். போரில் இருந்து மகளின் கவனத்தை திருப்பி வேண்டும் என்பதற்காக இவரின் தந்தை செஸ் கற்றுக்கொடுத்துள்ளார்.

செஸ் போட்டி:


Chess Olympiad 2022 :

இதனால் 4 வயதிலேயே காய்களை நகர்த்த தொடங்கிய ராண்டா இப்போது பாலஸ்தீன அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு போட்டிகளில் ஆடியவர். இப்போது தேசிய அளவில் அங்கு சிறந்த பெண் வீரர். இந்த தொடரில் ஹங்கேரி வீராங்கனை ஜூடித்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்தியாவிற்கு வர தீவிரமாக ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் இவரின் ரேங்க் 98 ஆயிரத்து 388. இவரின் பிறந்த வருடம் 2014.

சென்னை ஒலிம்பியாட்:

'கலைந்த முடி, போர் பற்றிய சுவடே இல்லாத க்யூட் முகம், இவர் நடந்து வரும் ஸ்டைல்' எல்லாம் சென்னை ஒலிம்பியாட்டை புரட்டி போட்டுள்ளது. 3 நாட்களிலேயே அங்கு இருக்கும் பலருக்கும் செல்ல குட்டியாக ராண்டா மாறிவிட்டார். அதிலும் முதல் போட்டியிலேயே கோமோரோஸ் அணியை வீழ்த்தி, நான் வெறும் செல்லக்குட்டி அல்ல.. செஸ் சிங்கக்குட்டி என்பதை நிரூபித்து இருக்கிறார் இந்த போர் கண்ட பெண் சிங்கம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget