CWG 2022 Boxing: காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவிற்கு 5-வது பதக்கத்தை உறுதி செய்த ஜெயஸ்மீன் !
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜெயஸ்மீன் அரையிறுதி சென்றுள்ளார்.
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜெயஸ்மீன் பங்கேற்றார். இவர் காலிறுதிப் போட்டியில் இன்று விளையாடினார். அதில் நியூசிலாந்து வீராங்கனை டாரி கார்டனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் சுற்றில் இவர் சிறப்பாக விளையாடினார்.
முதல் சுற்றில் அவர் அதிகமான புள்ளிகளை பெற்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் இரு வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினர். எனினும் இந்தியாவின் ஜெயஸ்மீன் அந்தச் சுற்றிலும் சிறப்பாக செயல்பட்டு நிறையே புள்ளிகளை பெற்றார். மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் நியூசிலாந்து வீராங்கனை எடுத்த முயற்சிகள் அனைத்தையும் சிறப்பாக முறியடித்தார். இதன்மூலம் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அத்துடன் இந்தியாவிற்கு குத்துச்சண்டையில் 5வது பதக்கத்தை இவர் உறுதி செய்தார்.
.@BoxerJaismine ASSURES 5️⃣th MEDAL! 👏🥊
— Boxing Federation (@BFI_official) August 4, 2022
A valiant effort from the 🇮🇳 pugilist to book her berth in the semis of the #CommonwealthGames2022.
Kudos on the win! 👏🙌🏻@AjaySingh_SG | @debojo_m @birminghamcg22 #Commonwealthgames#B2022#PunchMeinHainDum 2.0#birmingham22 pic.twitter.com/FKQKX17p2W
முன்னதாக இன்று ஆடவருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் பங்கேற்றார். இவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் அமித் பங்கால் ஸ்காட்லாந்து வீரர் முல்லிகன் லென்னானை எதிர்த்து விளையாடினார்.
இந்தப் போட்டியில் முதல் சுற்றில் அமித் பங்கால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அந்தச் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்று அசத்தினார். இரண்டாவது சுற்றிலும் அமித் பங்கால் சிறப்பாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக அவர் அதிக புள்ளிகளை பெற்றார்.
மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் அவர் ஸ்காட்லாந்து வீரரின் முயற்சிகள் அனைத்தையும் லாவகமாக தடுத்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு அமித் பங்கால் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் நடப்பு காமன்வெல்த் தொடரில் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு 4வது பதக்கம் உறுதியாகியுள்ளது.
முன்னதாக நேற்று ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹூசாமுதுதீன் காலிறுதியில் வெற்றி பெற்று முதல் பதக்கத்தை உறுதி செய்தார். அவரைத் தொடர்ந்து மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நீத்து அரையிறுதி சென்று பதக்கத்தை உறுதி செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகத் ஸரீன் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு 3வது பதக்கத்தை உறுதி செய்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது அமித் பங்காலை தொடர்ந்து ஜெயஸ்மீன் இந்தியாவிற்கு ஐந்தாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்